ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டுத் தாக்குதல் ; 30 பேர் பரிதாப பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கே அமைந்த லோகர் மாகாணத்தின் தலைநகர் புல் இ ஆலமில் மருத்துவமனை ஒன்றின் அருகே இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் 30 பேர் பலியாகினர்.

ரமழான் நோன்பை முஸ்லிம்கள் துறந்த பின்னர் 6.50 மணியளவில் மருத்துவமனைக்கு வெளியே திடீரென கார் வெடிகுண்டு தாக்குதல் ஒன்று நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் சிக்கி 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 70 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்தக் குண்டு வெடிப்பு சம்பவத்தில் மருத்துவமனை கட்டிடம் மற்றும் மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த அம்புலன்சுகள் ஆகியவை பலத்த சேதமடைந்தன. மருத்துவத் துறையைச் சார்ந்த பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலர் பல்கலைக்கழக நுழைவுப் பரீட்சை எழுதி விட்டு, நோன்பு துறப்பதற்காக மருத்துவமனையைச் சுற்றியிருந்த சிறிய உணவு விடுதிகளில் சாப்பிடச் சென்றவர்கள்.

இதையடுத்து அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து தனியார் மருத்துவமனைகளின் அம்புலன்சுகள் சம்பவ பகுதிக்கு வரவழைக்கப்பட்டன. பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *