அமெரிக்காவின் இந்தியானாபோலிசில் இன்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தியானா போலிசில் பெட்எக்ஸ் நிறுவனத்தில் அலுவலகமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்திலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
சூட்டுக் காயங்கள் காரணமாக எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவரும் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பத்துக்கு மேற்பட்ட துப்பாக்கிப் பிரயோக சத்தங்களைக் கேட்டதாக பெட்எக்ஸ் நிறுவனத்துக்குள் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதலில் கார் சத்தம் என நினைத்தோம் ஆனால் தொடர்ந்து சத்தங்கள் கேட்டதால் வெளியே பார்த்த வேளை துப்பாக்கியுடன் நபர் ஒருவர் காணப்பட்டார் என ஒருவர் தெரிவித்துள்ளார்.
வாகனமொன்றின் அருகில் சடலமொன்றைப் பார்த்தேன் எனத் தெரிவித்துள்ள அவர் கடவுளுக்கு நன்றி ; நானும் சுடப்படுவேன் என நினைத்தேன் எனத் தெரிவித்துள்ளார்.
Reported by : Sisil.L