அமெரிக்காவின் கொலராடோவில் மர்ம நபர் ஒருவர் வணிக நிலையமொன்றில் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பத்துப் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
குறித்த நபர் வர்த்தக நிலையமொன்றிற்குள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் சிக்கி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட பத்துப் பேர் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலை மேற்கொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் நடந்த கொலரோடா மாகாண கவர்னர் ஜாரெட் பொலிஸ் கூறும்போது, ‘‘இந்த நிகழ்வை பார்க்கும்போது என் இதயம் உடைந்து போகிறது. இது புத்தியில்லாத சோகம்’’ என்றார்.
Reported by : Sisil.L