கறுப்பு நிறத்தில் மூக்குடைய கரையோரம் வாழும் பறவையினம் ‘லேப்விங்ஸ்’ எனப்படும் ஆள்காட்டிப் பறவையாகும். மனிதர்களையோ அல்லது மற்ற எதிரி விலங்கினங்களையோ கண்டால் ஒலி எழுப்பி மற்ற பறவைகளுக்கும் தெரியப்படுத்தும். இதன் காரணமாக இந்தப் பறவை ஆள்காட்டிக் குருவி என்று அழைக்கப்படுகிறது. இப்பறவை தரையில் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் என்பது விந்தையான தகவலாகும்.
பெரிய பறவைகள் அதிகபட்சமாக 35 செ.மீ. நீளம் வரை இருக்கும். ஆண் மற்றும் பெண் பறவைகள் ஒன்று போலவே இருக்கும். ஆனால் ஆண் பறவையின் இறக்கைகள் கொஞ்சம் நீண்டும், கால் மணிக்கட்டு சற்றே வெளியில் நீட்டியவாறும் இருக்கும். இவை பொதுவாக இணைகளாகவும் அல்லது சிறு குழுக்களாகவும் உழுத நிலங்களிலும், மேய்ச்சல் பகுதியிலும், நீர் நிலை அருகேயும் காணப்படுகின்றன. இனப்பெருக்கம் அல்லாத குளிர் காலங்களில் இவை சுமார் 26 பறவைகள் முதல் 200 பறவைகள் வரை ஒன்றாக வசிக்கின்றன. அமீரகத்தைப் பொறுத்தவரையில் மிக அரிதாகக் காணப்படும் பறவையாகும். ஆனால் இந்த ஆண்டில் தற்போது அதிகபட்சமாக 34 ஆள்காட்டிப் பறவைகள் வருகை புரிந்துள்ளன. இதற்கு முன் 12 பறவைகளே பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது அபுதாபி- டுபாய் எல்லைப் பகுதி அருகே உள்ள அல் மஹா பைவோர் விவசாயப் பண்ணை அருகே இந்தப் பறவைகள் பறந்து உலா வந்து கொண்டு நடமாடும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெயில் காலம் தொடங்கினால் இந்தப் பறவை அங்கிருந்து சென்று விடும். இந்த அரிய வகை பறவை இனத்தைப் பாதுகாக்க அபுதாபி முகம்மது பின் ஜாயித் உயிரின பாதுகாப்பு நிதியத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
Reported by : Sisil.L