வியர்வையை மண்ணுக்கு உரமாக்கி.. வெயில் மழை பாராமல் பாடுபட்டு.. விளைத்தெடுத்த நெல்மணிகளை புதுப்பானையில் போட்டு பொங்கலிட்டு… பொங்கலோ பொங்கலென்று அனைவரும் சேர்ந்து கூறிடுவோம்.
உழவனுக்கு ஒரு திருநாளாம் உலகம் போற்றும் நன்னாளாம் சூரியனை வணங்கிவிட்டு சுருக்கு பையில் காசு எடுத்து தித்திக்கும் கரும்பு வாங்கி தெவிட்ட தின்னும் திருநாளாம்
வருகிறது புது பொங்கல் வளம் தரும் தை பொங்கல் காளைகள் சீறிப்பாய காத்துக்கிடக்கு வாடி வாசல் அரிசி மாவில் கோலமிட்டு ஜொலிக்கிறது வீடு வாசல்
பச்சரிசி அச்சு வெல்லம் கலவை செய்து பொங்கலிட்டு பகலவனை வணங்கிவிட்டு பகைவரையும் வாழ்த்துவோமே
சந்தோஷமும் செல்வமும் நம் வாழ்வில் பொங்கி வர சாதி மத பேதமின்றி சங்கடங்கள் ஏதுமின்றி கை கூப்பி வரவேற்போம் தை பொங்கல் திருநாளை
உழவனை போற்றிட பிறக்குது ஒரு திருநாள் ஆதவனை போற்றிட உதிக்கிறது ஒரு திருநாள் மாட்டினை போற்றிட துள்ளி வருகுது ஒரு திருநாள் உலக மக்கள் கூடி ஒன்றிணைய வருகிறது பொங்கல் திருநாள்.
கடன் வாங்கி தவிக்கும் உழவன் உள்ளுக்குள் பொங்குகின்றான்.. காசு பணம் சேர்த்து வைத்தவன் இல்லத்தில் பொங்குகின்றான்..
உறவுகளின் புன்னகை வீட்டில் பொங்க இனம் புரியா இன்பம் மனதில் பொங்க.. நபர்கள் சூழ மகிழ்ச்சி பொங்க பொங்கட்டும் தை பொங்கல்.