2050ஆம் ஆண்டுக்குள் உலகி நான்கில் ஒருவருக்கு செவித் திறன் பிரச்சினை ஏற்படும்: உலக சுகாதார நிறுவனம்

உலகளவில் செவித் திறன் பிரச்சினையால் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பல்வேறு பாதிப்புகள் காரணமாக காது கேட்கும் திறன் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உலகம் முழுவதும் ஐந்தில் ஒருவர் செவி திறன் பிரச்சினையால் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 2050ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் செவி திறன் பிரச்சினையால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் உலக மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் 2050ஆம் அண்டுக்குள் செவி திறன் பிரச்சினையால் பாதிக்கப்படுவார்.

ஏனென்றால் இந்தப் பிரச்சினை சரியாக கவனிக்கப்படவில்லை. அடுத்த மூன்று தசாப்தங்களில் செவித் திறன் குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கை 1½ மடங்குக்கும் மேலாக அதிகரிக்கக் கூடும். 2.5

பில்லியன் மக்கள் பாதிக்கப்படக்கூடும். இது 2019ஆம் ஆண்டில் 1.6 பில்லியனாக இருந்தது.

2.5 பில்லியன் மக்களில் 700 மில்லியன் பேர் 2050ஆம் ஆண்டுக்குள் சிகிச்சைகள் தேவைப்படும் அளவுக்கு தீவிரமான நிலையை எட்டக்கூடும். இந்தச் சிகிச்சை அளவு 2019ஆம் ஆண்டில் 430 மில்லியனாக இருந்தது.

செவி திறன் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் அதைத் தீர்ப்பதற்கான கவனிப்பு அணுகல் பற்றாக்குறை ஆகும். குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் சிகிச்சை அளிக்க குறைந்த வல்லுனர்களே உள்ளனர்.

 பணக்கார நாடுகளில் கூட, செவி திறன் பிரச்சினையில் சிகிச்சை சீரற்றதாக இருக்கிறது.

இப்பிரச்சினை சரியாக கவனிக்கப்படாததால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு டிரில்லியன் அமெரிக்க டொலர் இழக்கப்படுகிறது. பொது இடங்களில் சத்தத்தைக் குறைப்பதில் இருந்து காது கேளாமை மற்றும் மூளைக் காய்ச்சல் போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகளை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *