அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் 2ஆவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட டிரம்ப், ஜனநாயக கட்சியின் ஜோபைடனிடம் தோல்வியைத் தழுவினார். தோல்விக்குப் பிறகு முதல் முறையாக பொது மேடையில் பேசிய டிரம்ப், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் நான் போட்டியிடலாம் என்று கூறினார்.
டிரம்ப் மேலும் கூறுகையில்,
நாம் தொடங்கிய இந்தச் சிறப்பான பயணம் முடிவுக்கு வர வெகு தொலைவுள்ளது. புதிய கட்சியை தொடங்குவதில் விருப்பம் இல்லை. பைடன் நிர்வாகம் மோசமாக இருக்கப்போகிறது என்பது எமக்குத் தெரியும். ஆனால், எந்த அளவு மோசமாக இருக்கப்போகிறது என்பதை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. 2024 ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி படுதோல்வியைச் சந்திக்கும்” என்றார்.
Sisil