வடக்கு மாகாணத்தில் முறையற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சிப் பணிகள் மூலம் தமிழ் மக்களைக் கிளர்ந்தெழ வைக்காதீர்கள்” – இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் மாவை சேனாதிராஜா தெரிவிப்பு !

வடக்கு மாகாணத்தில் முறையற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சிப் பணிகள் மூலம் தமிழ் மக்களைக் கிளர்ந்தெழ வைக்காதீர்கள்” என தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா – 2,500 பேருக்கு பட்டம் வழங்க திட்டம் !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம், 25ஆம் திகதிகளில் கொவிட்-19 நிலைமைகளுக்கு ஏற்ப புதிய ஒழுங்குடன் இடம்பெறவுள்ளது. வழமையாக 1,500 மாணவர்கள் வரையில் தான் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுவார்கள். ஆனால் இம்முறை…

இராணுவத்தின் உதவியுடன் தமிழர் பகுதிகளில் தொடரும் பௌத்தமயமாக்கல் – இராணுவத்தினர் புடைசூழ தமிழர் நிலத்தில் பௌத்த சின்னங்களை தேடிய ஆராய்ச்சி ஆரம்பம் !

தமிழ் மக்களுக்கு சொந்தமான புராதன ஆதி சிவன் அய்யனார் ஆலயம் அமைந்துள்ள வயல் நிலங்கள் காணிகள், உள்ளடங்கிய குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை மற்றும் மணலாறு படலைக்கல்லு பகுதி ஆகிய இடங்களில் இரண்டு புராதன பௌத்த விகாரைகள் இருந்தமைக்கான தொல்லியல் சிதைவுகள்…

ஹர்த்தாலால் முடங்கிப்போன தமிழர் பகுதிகள் !

யாழ் பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் காரணமாக தமிழர் வாழ் பகுதிகள் பலவும் இன்றையதினம் ஹர்த்தால் காரணமாக முடங்கிப்போயுள்ளது. மக்கள் அனைவரும் இன்றைய ஹர்த்தாலுக்கு…

களுத்துறைக்கு செல்லவிருந்த வைத்திய இயந்திர உபகரணங்கள் இரா.சாணக்கியன், சுமந்திரன் தலையீட்டினால் மீள மட்டக்களப்பிற்கு !

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காணப்படுகின்ற புதிய இருதயவியல் பிரிவின் ஆய்வகத்திற்கு (Cardiology Unit – Cardiac Catheterization Laboratory) இரு கிழமைகளில் வர இருந்த வைத்திய இயந்திர உபகரணங்களை (இதய வடிகுழாய் மற்றும் ஆஞ்சியோகிராம்) இடைநிறுத்தி அதனை களுத்துறை மாவட்டத்திற்கு மாற்றியமைப்பதற்கான…

பேரினவாத செயற்பாடுகளுக்கு மத்தியில், பலமிழந்திருக்கும் சமூகங்களுக்கு ஒரே குரலான ஊடகங்களை அடக்கவே ‘உதயன்’ மீதான வழக்குத்தாக்கல் நிகழ்ந்துள்ளது” – இரா.சாணக்கியன் கண்டனம் !

அடக்கு முறை, பௌத்த மேலாதிக்க, பேரினவாத செயற்பாடுகளுக்கு மத்தியில், பலமிழந்திருக்கும் சமூகங்களுக்கு ஒரே குரலாக ஊடகங்களே உள்ளன. இத்தகைய குரலை நசுக்கவே ‘உதயன்’ மீதான வழக்குத்தாக்கல் நிகழ்ந்துள்ளது.” என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். ‘உதயன்’ மீதான…

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உன்னதமான தலைவர். அவருக்கு நிகர் அவர்தான். அதேவேளை, அவர் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகளும் மிகவும் பலம் பொருந்தியவர்கள்” – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உன்னதமான தலைவர். அவருக்கு நிகர் அவர்தான். அதேவேளை, அவர் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகளும் மிகவும் பலம் பொருந்தியவர்கள்” என ஐக்கிய மக்கள் சக்தியின்கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். இது…

இலங்கையில் முஸ்லீம்கள் அமைதியாக வாழ முடியாத சூழல் காணப்படுகின்றது” – முஸ்லீம்களின் உடல்கள் எரிக்கப்படுவதற்கு சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம்

இலங்கையில் முஸ்லீம்கள் அமைதியாக வாழ முடியாத சூழல் காணப்படுகின்றது”  என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. நாட்டு மக்கள் அனைவரையும் சமத்துவத்துடன் நடத்தவேண்டிய கடப்பாடு தமக்கு இருப்பதை இலங்கை அரசாங்கம் மறந்துவிடக்கூடாது என்றும் அந்தச்சபை வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறந்த…

யாழ். குடாநாட்டு மக்கள் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்” – இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா

யாழ். குடாநாட்டு மக்கள் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள  வேண்டும்” என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கோரியுள்ளார். யாழ். மருதனார்மடத்தில் திடீரெனக் கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றமை…

ஐக்கிய மக்கள் சக்தியை நாம் தான் உருவாக்கினோம். சரத் பொன்சேகா நேற்று வந்தவர். அரசியலில் நான் சிறு பையன் கிடையாது” – மாவீரர்தினம் தொடர்பான பொன்சேகாவின் கருத்துக்கு மனோகணேசன் பதில் !

மாவீரர் தினத்தில் வடக்கில் புரவி ஏற்பட்டிருந்தால் சந்தோசப்பட்டிருப்பேன் எனவும் மாவீரர்தினம் தொடர்பாகவும்   ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அண்மையில் பாராளுமன்றில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பல தமிழ் பாராளுமன்ற…