புதிய அரசை நியமிக்க எதிர்க்கட்சி தயாராக உள்ளது -சஜித் பிரேமதாச

தாய் நாட்டைப் பாதுகாக்கவும், நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டை ஸ்திரப்படுத்தும் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…

தனியார் பஸ் விபத்தில் இருவர் பலி ; பிரதேச வாசிகள் பஸ்ஸுக்கு தீ வைப்பு

கம்பளை, கச்சமலை வீடன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பேருந்தில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர். கம்பளை பெரட்டாசியில் இருந்து புசல்லாவ நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக புபுரஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர். விபத்து நடந்த போது பேருந்தில் சுமார் 80 பயணிகள் பயணம்…

யாழ். – கிளிநொச்சி விஷேட ரயில் சேவை இன்று ஆரம்பம்

யாழ்ப்பாணத்துக்கும்  கிளிநொச்சிக்கும் இடையிலான உத்தியோகத்தர்களுக்கான விஷேட சேவை இன்று(11) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பணியாளர்களின் கோரிக்கைக்கமைய கிளிநொச்சிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான  புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண நிர்வாக மாவட்டங்களைச்…

உலகச் சந்தையில் எண்ணெய் விலை குறைந்தது

இன்று (11) உலகச் சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை மேலும் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு பீப்பாய் பிரென்ட் எண்ணெயின் விலை 107.28 அமெரிக்க டொலராகவும், டபிள்யூ.டி.ஐ. எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 164.63 டொலராகவும் பதிவாகியுள்ளன. இரண்டு வாரங்களுக்கு முன்பு…

நீச்சல் தடாகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள்

ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் களைப்பு மிகுதியால் நீச்சல் தடாகத்தில் நீந்தி தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் காட்சி… Reported by :Maria .S

எதிர்க்கட்சித் தலைவர் வைத்தியசாலையில் அனுமதி

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.——————– Reported by :Maria.S

மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் 23 பேருக்கு காயம்

இன்று நடைபெற்ற மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகை அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரு பொலிஸார் உட்பட 23 பேர் இதுவரை காயமடைந்துள்ளனர். இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.—————————— Reported by: Maria.S

கண்டி ரயிலுக்கான பயணக்கட்டணம் முழுவதையும் ஏற்ற தனவந்தர்

கொழும்பில் இன்று நடைபெற்ற போராட்டத்துக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் திரண்டு வந்தனர்.கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி வரும் ரயிலுக்கு, முழு ரயிலுக்குமான கட்டணத்தை ஒருவரே செலுத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை ரயில் செல்ல முடியாது என அறிவிக்கப்பட்ட போதிலும், போராட்டத்தில்…

யூரியா கப்பல் நாட்டை வந்தடைந்தது; நாளை முதல் உர விநியோகம்

40,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தை ஏற்றிய உரக்கப்பல் சற்று முன்னர் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்த உரம் இன்று (09) இறக்கப்பட்டு, நாளை (10) இந்திய உயர்ஸ்தானிகரால் விவசாய அமைச்சரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது. இந்த உர விநியோகம் நாளை முதல்…

ஆர்ப்பாட்டக்காரர்களின் பூரண கட்டுப்பாட்டில் ஜனாதிபதி மாளிகை

காலைமுதல் அரசாங்க எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்  பல்வேறு தடைகளைத் தகர்த்தெறிந்து ஜனாதிபதி மாளிகையை தமது  பூரண கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர்.  எனினும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அங்கிருந்து முன்னரே தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ————————– Reported by : Maria.S