நல்லூர் விபத்தில் மக்கள் வங்கி உத்தியோகத்தர் பலி

யாழ்ப்பாணம், நல்லூரில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மக்கள் வங்கியின் கன்னாதிட்டிக் கிளை உதவி முகாமையாளர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் தலையில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மின் தடைப்பட்டிருந்த…

யாழில் 22 பேருக்கு நேற்று கொரோனா தொற்று: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

யாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று திங்கட்கிழமை உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 8 பேர் இ.போ.ச. காரைநகர் சாலையில் பணியாற்றும் சாரதிகள், நடத்துநர்கள், காப்பாளர்கள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணப்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை எம்மால் தடுக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்கின்றோம் : சஜித் பிரேமதாச

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை எங்களால் தடுக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்கத் தயாராகவுள்ளேன் எனத் தெரிவித்துள்ள இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர் என மக்கள் கருதுவதாகத் தெரிவித்துள்ளார். உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பதைக்…

என்னைக் கண்காணிக்கின்றார்களா? இலங்கைக்கான கனடியத் தூதுவர் கேள்வி

இலங்கையில் தன்னை  கண்காணிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றனவா  என இலங்கைக்கான கனடியத் தூதுவர் டேவிட்  மக்கினன் கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பிலுள்ள தனது இல்லத்திற்கு விஜயம் செய்த இருவர் குறித்து ஊடகங்களில் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்தே கனடியத் தூதுவர் இது குறித்து  டுவிட்டரில் கேள்வி…

யாழ். மாநகர சபையைக் கலைக்க சதி :முதல்வர் வி.மணிவண்ணன்

ராஜபக்ஷவினரின் பின்னணியில் யாழ். மாநகர சபையைக் கலைக்க சதி நடக்கிறது. இந்தச் சதி வேலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஈடுபட்டுள்ளது என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் யாழ் மாநகர சபை முதல்வர் வி. மணிவண்ணன்.மாநகர சபையின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்க மளிக்கும்…

சர்வதேச மகளிர் தினம்: தமிழ்ப் பெண்களுக்கு நீதி கோரி யாழ்.,முல்லையில் போராட்டம்

அரசாங்கம் தமிழ் பெண்களுக்கு இழைத்த அநீதிகளுக்கு நீதி கோரி சர்வதேச மகளிர் தினமான இன்று யாழ்ப்பாணத்திலும், முல்லைத்தீவிலும் போராட்டங்கள் இடம்பெறுகின்றன. யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெறவுள்ள தீச்சட்டி ஏந்தும் போராட்டம்,  முற்பகல் 11 மணியள வில் நல்லூரில் சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டம்…

யாழில் நேற்று அறுவருக்கு கொவிட்-19 தொற்று

யாழ்ப்பாணத்தில் ஆசிரியை, தாதி, கைதி உட்பட ஆறு பேர்நேற்று கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டனர்.யாழ். போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் நேற்று நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே இவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். தொற்றுக்குள்ளானவர்களில் மூவர் யாழ். மாநகர சபை எல்லைக்கு உட்பட்டவர்கள்.இவர்களில்…

யாழ்ப்பாணத்தில் கஸ்தூரியார் வீதியில் வீட்டின் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். உதயன் பத்திரிகை அலுவலகத்துக்கு முன்னால் உள்ள வீட்டின் மீதே தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 3 மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டனர் என வீட்டில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கில் நேற்று நால்வருக்கு கொவிட்19 தொற்று: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. மன்னாரில் நேற்று ரயிலில் மோதி உயிரிழந்தவருக்கும் கொரோனாத் தொற்று உறுதிப் படுத்தப்பட்டது என்று வடக்கு  மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் – இலங்கை ஜனாதிபதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளார் இதற்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், முன்னைய அரசாங்கத்தின்…