மன்னாரில் கடலட்டை இனப்பெருக்க நிலையம் திறப்பு

கடற்றொழில், கைத்தொழிலை மேம்படுத்தும் வகையில் மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட கடலட்டை இனப்பெருக்க நிலையம் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. தேசிய நீர் வாழ் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ஜயந்த விஜேரத்தினவின்…

வடக்கில் 29 பேருக்கு நேற்று உறுதியானது: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் 27 பேருக்கும் கிளிநொச்சி, முல்லைத் தீவில் தலா ஒருவருக்கும் என மொத்தம் 29 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்றுச் செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம்…

வருட இறுதிக்கு முன்பாக மாகாணசபை தேர்தல் : அமைச்சர் சந்திரசேன

வருட இறுதிக்கு முன்பாக மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் எண்ணியுள்ளது என அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனதெரிவித்துள்ளார். நேற்றைய அமைச்சரவை சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் தேர்தல் முறை குறித்து கட்சித் தலைவர்களின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்னரே தேர்தலுக்கான அமைச்சரவையின் அங்கீகாரத்தைப்…

யாழ்நகரில் 8 பேர் உட்பட வடக்கில் 26 பேருக்கு மேலும் தொற்று

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் 21 பேருக்கும் வவுனியா, முல்லைத்தீவில் 4 பேருக்கும் கிளிநொச்சியில் ஒருவருக்கும் என மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்றுஉள்ளமை நேற்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை…

பெரிய வெள்ளி – உயிர்த்த ஞாயிறு திருப்பலிகளுக்கு விஷேட பாதுகாப்பு ஏற்பாடு

இரண்டு ஆண்டுகளின் பின் கிறிஸ்தவர்கள் பெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு திருப்பலிகளில் பங்கேற்கையில்  அவற்றுக்கு விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யுமாறு பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கும் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் சிறப்பு…

கணவனைக் கொன்றதாக 3 பிள்ளைகளின் தாயார் கைது

கொஸ்வத்தையில் கணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டில் 3 பிள்ளைகளின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.தனிப்பட்ட தகராறைத் தொடர்ந்து அப்பெண் தனது கணவனைக் கொன்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். கொஸ்வத்த லுணுவிலவில் இக்குற்றம் இடம்பெற்றதாகவும்…

மணற்காட்டில் தடை செய்யப்பட்டசுருக்கு வலை மீன்பிடியில் ஈடுபட்டவர்களின் வாடிக்குத் தீ

வடமராட்சி கிழக்கு – மணற்காட்டில் தடை செய்யப்பட்டசுருக்கு வலை மீன்பிடியில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் தங்கி யிருந்த வாடி இனம் தெரியாதவர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது.இந்தப் பகுதியில் சுருக்கு வலையைப் பயன்படுத்தி சட்டவிரோத தொழில் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகக்கூறப்படுகின்றது. இந்நிலையில், இவ்வாறு சட்டவிரோத…

யாழ்ப்பாணத்தில் மேலும் 63 தொற்றாளர்கள் அடையாளம்

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸுக்கு  மேலும் 63 தொற்றாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். இதன்படி சுன்னாகத்தில் 29 பேருக்கும் யாழ்ப்பாண நகரப்பகுதியில் 23 பேருக்கும் கோப்பாயில் 23 பேருக்கும் என 63 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய மத்திய…

100க்கும் அதிக தமிழர்களை ஜேர்மனி நாடு கடத்துகிறது

ஜேர்மனியில்  தஞ்சம் கோரிய 100 இற்கும் அதிகமான தமிழர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜேர்மனியின் வடக்கு ரைன்- வெஸ்ட்பாலியா(North Rhine-Westphalia)  பகுதியில் 100இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கடந்த சில நாட்களில் கைது செய்யப்பட்டுள்ள…

தாமரைப்பூ பறிக்கச்சென்ற ஆசிரியர் நீரில் மூழ்கிப் பலி

வவுனியாவில் தாமரைப் பூ பறிப்பதற்காக நேற்றுக் காலை வைரவ புளியங்குளம் குளத்தில் இறங்கிய ஆசிரியர் ஒருவர் நீரில் முழ்கி மரணமடைந்துள்ளார். வவுனியா, குட்செட் வீதி, கருமாரி அம்மன் ஆலயத்தின் தேர்த்திருவிழாவிற்கு தாமரைப்பூ மற்றும் தாமரை இலை என் பவற்றை பறிப்பதற்காக ஆசிரியர்…