இலங்கை விமானிகளின்றி பறக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

அனைத்து விமானிகளும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை விட்டு வெளியேறினாலும், வெளிநாட்டு விமானிகளை அமர்த்தி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்ந்தும் இயக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். சிவில் விமான சேவைகள் அதிகார சபையில்…

கவனயீர்ப்புப் போராட்டம்

வடக்கு மாகாண ரீதியாக டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் சுத்திகரிப்பு பணியை மேற்கொள்ளும் ஊழியர்கள் இன்று (14) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். யாழ். மாவட்ட செயலகம் முன்பாக மற்றும் வடக்கு மாகண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னாகவும் இடம் பெற்ற குறித்த கவனிப்பு…

நாட்டைக் கட்டியெழுப்ப நிதி ரீதியான ஒழுக்கம் அவசியம்: ஜனாதிபதி வலியுறுத்தல்

நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், நிதி ரீதியான ஒழுக்கம் அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  அரசாங்கத்தின் புதிய வருமான மார்க்கங்களை உருவாக்குவதற்கான உத்திகளைக் கண்டறிவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கையளிக்கப்பட்ட போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.  நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல்…

பேராதனை போதனா வைத்தியசாலையில் மற்றுமொரு சந்தேகத்திற்கிடமான மரணம்

பேராதனை போதனா வைத்தியசாலையில் மற்றுமொரு சந்தேகத்திற்கிடமான மரணம் பதிவாகியுள்ளது.  21 வயதான சமோதி சங்தீபனி கடந்த திங்கட்கிழமை வயிற்றுப்போக்கு காரணமாக  கெட்டபிட்டிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்றைய தினம் இரவு அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற அவர்,  நேற்று காலை பேராதனை…

பட்டபொலவில் கூரான ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை: மூவர் கைது

காலி – பட்டபொல, பட்டதூவ பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கடந்த மாதம் 23 ஆம் திகதி இரவு உணவகமொன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் பட்டதூவ, கொபெய்துடுவ பகுதியைச்…

கொழும்பு – யாழ். ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீள ஆரம்பம்

அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையிலான ரயில் போக்குவரத்து எதிர்வரும் சனிக்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.  அதற்கமைய, கொழும்பு கோட்டை முதல் காங்கேசன்துறை வரை வழமையான நேர அட்டவணைக்கமைய ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளது.  அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையான…

மல்லாவியில் இளைஞர் சுட்டுக்கொலை: கைது செய்யப்பட்ட நால்வருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

முல்லைத்தீவு – மல்லாவி, பாலிநகர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரையும் 14  நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  பாலிநகரில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். …

மைத்திரிபால சிறிசேன இழப்பீட்டை செலுத்தினார்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க தவறியதன் ஊடாக அடிப்படை மனித உரிமை மீறப்பட்டமையால் 100 மில்லியன் ரூபா இழப்பீட்டை செலுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய, அவர் 15 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  மைத்திரிபால…

தொடர்சியாக 22ஆவது வருடமாக கதிர்காமம் கிரி வெஹெர மற்றும் ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்தை ஒளியூட்டும் சுதேசி கொஹொம்ப

இலங்கையின் இரண்டு முக்கிய வழிபாட்டுத் தலங்களான கதிர்காமம் கிரி வெஹெர மற்றும் ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்தின் 2023 எசல திருவிழாக்களுக்கு, முன்னணி மூலிகைகள் கொண்ட தனிநபர் பராமரிப்பு பொருட்கள் உற்பத்தியாளர்களான Swadeshi Industrial Works PLC நிறுவனத்தினால் ஒளியேற்றப்பட்டன. சுதேசி…

அசுர வேகத்தில் பறந்த யாழ் தேவி

அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து வவுனியா – ஓமந்தை புகையிரத நிலையம் வரையில் இன்று (09) காலை பரிட்சார்த்தமாக யாழ் தேவி புகையிரதம் அசுர வேகத்தில் ஒலி எழுப்பியவாறு பயணம் செய்தது. இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்தினால் மஹவ முதல்…