மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

இலங்கை போக்குவரத்து சபை மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகளை இடைநிறுத்தியுள்ளது.இதன்படி நேற்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள்  இரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலைக்…

நேற்று நள்ளிரவிலிருந்து மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் – 30ஆம் திகதி வரை நீடிக்கும்

நேற்று நள்ளிரவிலிருந்து இலங்கையில் மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்துக் கட்டுப்பாடு நடைமுறைக்கு வந்துள்ளன. கொரோனா வைரஸ் துரிதமாக பரவுவதை கட்டுப்படுத்து வதற்கான ஒரு நடவடிக்கையாக நேற்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தன.30ஆம் திகதி வரை இந்தப் போக்குவரத்து…

யாழில் கொரோனாவால் வயோதிபர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றால் வயோதிபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா நோயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22ஆகஅதிகரித்துள்ளது. வடமராட்சி, உடுப் பிட்டியைச் சேர்ந்த 88 வயதுடைய வயோதிபரே…

இலங்கையில் கொரோனாவுக்கு மேலும் ஒரு கர்ப்பிணிப் பெண் பலி

இலங்கையில் மேலும் ஒரு கர்ப்பிணிப் பெண் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.காலி, கராப்பிட்டிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கர்ப் பிணிப் பெண்ணே இவ்வாறு…

மிக ஆபத்தான நிலையில் நாடு- அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

புதிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில் அரசு  சரியான முடிவுகளை எடுப்பது மிகவும் அவசியமாகும்.” இவ்வாறு அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம். இந்தச் சந்தர்ப்பத்தில் நாட்டில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதிலுள்ள…

யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபர் உட்படமேலும் 21 பேருக்கு கொரோனா : மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 15 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 21 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை நேற்று கண்டறியப் பட்டுள்ளது என்று  மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்களில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மாதிரி வழங்கிய யாழ்ப்பாணம்…

இலங்கையில் 5 நாடுகளின் 6 வைரஸ் திரிபுகள் பரவியுள்ளன : மருத்துவர் சந்திம ஜீவந்திர

இலஙகையில் 5 நாடுகளின் 6 வைரஸ் திரிபுகள் பரவி வருகின்றன என்று ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான  நிறுவகத்தின்  பரிசோதனையில்  தெரியவந்துள்ளது  என அதன் பணப்பாளர் மருததுவர் சந்திம ஜவந்திர தெரிவத்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:-…

அம்பாறை வீதி விபத்தில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிக்கு பலத்த காயம்

அம்பாறையில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்தில் அம்பாறை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ளனர். இரண்டு அதிகாரிகள் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் கெப் ரக வாகனம் ஒன்று மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து…

இலங்கையில் கொரோனா வைரஸால் நேற்று 22 பேர் பலி

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட 22 பேர் நாட்டில் நேற்று உயிரிழந்துள்ளனர்.கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த பின்னர் இலங்கையில் அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளமை நேற்றே என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்தவர்களில் ஆறு பெண்களும் காணப்படுகின்றனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் கொழும்பு 8, மொரட்டுவ, ராகம ஆகிய…

சட்ட விரோதமாக நுழைந்த தமிழக மீனவர்களின் ஆடையில் பிரபாகரனின் படம்

இலங்கை கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக ஊடுருவி மீன் பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் சிலர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் படம் பொறிக்கப்பட்ட ‘ரி சேர்ட்’ அணிந்திருந்தமை தொடர்பில் கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை கடற்பரப்பினுள் கடந்த வியாழக்கிழமை தமிழக மீனவர்கள் சட்டவிரோதமாக…