முடக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அரசாங்கத்தால் நிவாரணப் பொதி

தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் வைரஸ் தொற்று வேகமாக பரவுவதாக அடையாளம் காணப்பட்டு தற்போது முடக்கப்பட்டுள்ள பகுதி களிலுள்ள குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ரூபா 5000 பெறுமதியான நிவாரணப் பொதிகள் வழங்கப்படவுள்ளன. அமைச்சர் பந்துல குணவர்தனவின் ஆலோசனைக்கு அமைவாக 20 அத்தியாவசிய…

யாழில் மின்சாரம் தாக்கி குடும்பப்பெண் பலி

வீட்டின் முன் அமைக்கப்பட்டிருந்த தகரப் பந்தலில் ஏற்பட்ட மின் ஒழுக்குக் காரணமாக மின்சாரம் தாக்கிய குடும்பப்பெண், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த யோகேஸ்வரன் அருந்தினி (வயது-37)…

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப்பெண் மரணம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணியொருவர் பிரசவத்தின் பின்னர் உயிரிழந்துள்ளார். குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 28 வயதான கர்ப்பிணியொருவர் பிரசவத்தின்  பின்னர் உயிரிழந்துள்ளார். குழந்தையைக் காப்பாற்றியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இலங்கையில் தற்போதைய கொரோனா அலை காரணமாக கர்ப்பிணியொருவர் உயிரிழந்த மூன்றாவது சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.——————————- Reported…

ஜனாதிபதி, பிரதமரின் நோன்புப் பெருநாள் வாழ்த்து

முஸ்லிம்கள் அனைவருக்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். உலகம் எதிர்கொண்டுள்ள கொரோனா பேரழிவிலிருந்து உலக மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் இஸ்லாமியர்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு நீதிமன்றத் தடை உத்தரவு பெற்ற பொலிஸார்

முள்ளிவாய்க்காலில் எந்த நிகழ்வும் நடத்தக் கூடாது மக்கள் கூடக் கூடாது பொது இடத்தில் வைத்து எந்த நினைவுகூரக் கூடாது என்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் தடை உத்தரவு பெற்றுள்ளனர். அத்துடன் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தலில் ஈடுபட ஐந்து பேருக்கு எதிராகவும் பொலிஸார்…

முடக்க நிலையைக் கையாள 20ஆயிரம் பொலிஸார் களத்தில்

நேற்றிரவு முதல் நடைமுறைப்படுத்தப்படும் போக்குவரத்து முடக்கத்தை கண்காணிப்பதற்காக 20,000 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். போக்குவரத்து கட்டுப்பாடுகள் உரிய முறையில் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபடுவார்கள் எனவும் அஜித் ரோகண…

யாழ்.விபத்தில் படுகாயமடைந்த தாயும் மகனும் உயிரிழப்பு

விபத்தில் படுகாயமடைந்த தாயரும் மகனும் அடுத்தடுத்த நாளில் உயிரிழந்த சம்பவம் வல்வெட்டித்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சி – வல்வெட்டித்துறை – வேம்படியைச் சேர்ந்த மோகனதாஸ் பிறேமாவதி அவரின் மகனான மோகனதாஸ் திலீபன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து…

யாழில் 58 பேர் உட்பட வடக்கில் 74 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 58 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 74 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற் றுள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம்…

80ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நேற்று சினோபார்ம்,ஸ்புட்னிக் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன: பேராசிரியர் சன்ன ஜெயசுமன

கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் சுமார் 80,277 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார். சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசி மற்றும் ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் தடுப்பூசி ஆகியன நேற்று இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டன.  கம்பஹா, கொழும்பு…

இலங்கையர் 8 பேர் இந்தியாவில் கொரோனாவுக்குப் பலி

கொரோனா தொற்றுக் காரணமாக எட்டு இலங்கையர் இந்தியாவில் மரணமடைந்திருப்பதாக வெளிவிவகாரஅமைச்சு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. இதில் ஆறு பேர் புதுடில்லியிலும், இருவர் ராஜஸ்தானிலும் மரணமடைந்தனர். இதேவேளை, புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பணிபுரியும் ஆறு பேருக்குகொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. தூதரகப் பணியாளர்கள் பலர்…