இலங்கையின் சர்வதேச விமான நிலையம் பயணிகள் வருகைக்காக திறக்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு விமானங்களில் வெளிநாட்டவர்கள் உட்பட 169 பேர் இலங்கை வந்து சேர்ந்துள்ளனர்.கட்டாரிலிருந்து வந்த இரு விமானங்களில் வெளிநாட்டவர்கள் உட்பட 169 பேர் வருகை தந்துள்ளனர். முதலாவது விமானம் 53 பேருடன்…
Category: SRI LANKA 1
சினோபார்ம் தடுப்பூசிகளின் 2ஆவது டோஸ் ஜூன் 8 முதல்!
சினோபார்ம் தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸ் ஜூன் 8ஆம் திகதி முதல் வழங்கப்படுமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். சினோபார்ம் தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸ் நான்கு வார இடைவெளியில் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர், முதல் டோஸைப் பெற்றவர்கள்…
யாழ்ப்பாணத்தில் கொரோனாவால் மூவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் நேற்று திங்கட்கிழமை மூன்று பேர் உயிரிழந் துள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 தொற்றால் 43 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்புத் துறையைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவர் உள்பட மூவரே…
நாட்டில் போதியளவு உப்பு கையிருப்பில் உள்ளது : அமைச்சர் பந்துல குணவர்தன
நாட்டில் உப்பு பற்றாக்குறை இல்லை என்றும் உப்பு விலை அதிகரிக்கப்படாது என்றும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரவித்துள்ளார். கொழும்பு துறைமுகக் கடலில் எம்வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கொள்கலன் கப்பல் தீப்பிடித்து அதிகளவு இரசாயனங்களை கடல் நீரில் வெளியேற்றிய பின் உப்பின்…
5000 ரூபா இவ்வாரம் குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படும் : இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம
ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குவது தொடர்பான ஆவணங்களைத் தயாரிக்கும் பணி இன்று மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். இந்த வாரத்துக்குள் இக்கொடுப்பனவை விரைவாக வழங்குமாறு பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அவர்கள்…
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 755 பேர் கைது
கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 755 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 6 முச்சக்கர வண்டிகளில் பயணித்த ஏழு பேரும் அடங்குவதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இதேவேளை அக்கரைப்பற்றிலிருந்து…
நாட்டில் கொரோனா உயிரிழப்புகள் 53 வீதத்தால் அதிகரித்துள்ளன : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த வாரத்தில் 53 வீதத்தால் உயர்வடைந்துள்ளது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அதேநேரம், 83 வீதமான உயிரிழப்புகள் அதிகளவில் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளன என்றும் அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.நாட்டில் பரவும்…
கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் யாழில் நேற்று ஆரம்பம்
சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் “கொவிட் தடுப்பு மருந்துடன் வலிமையுடன் முன்னோக்கி” என்னும் கருப்பொருளுக்கு அமைய கொரோனா தடுப்பூசி வழங்கும் நிகழ்வு நேற்று காலை 9.00 மணியளவில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.குறித்த கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தை இளைஞர் மற்றும் விளையாட்டு துறை…
கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை இரு வாரங்களில் குறைவடையக் கூடும்: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
பயணக் கட்டுப்பாட்டு விதிமுறை மற்றும் சுகாதார நடைமுறைகளை மக்கள் முறையாகப் பின்பற்றினால் இன்னும் இரண்டு வாரங்களில்கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையக் கூடும். இவ்வாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதி வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-கடுமையான…
நாளாந்த பிசிஆர் சோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை : இராணுவத் தளபதி
இலங்கையில் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என்று கொரோனாத் தடுப்புககான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.வடக்கு மாகாணத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.நாட்டின் கொரோனாக்…