உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைக்கும் ஒவ்வொரு தடுப்பூசியையும் இலங்கை கொள்வனவு செய்யும் : அமைச்சர் ஹெகலிய

உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைக்கும் ஒவ்வொரு தடுப்பூசியும் மக்கள் நலன் கருதி இலங்கைக்குக் கொண்டுவரப்படும் என ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.  தடுப்பூசித் திட்டம் செயற்படுத்தப்படுவதை ஆய்வு  செய்வதற்காக கடந்த வியாழக்கிழமை குண்டசாலை வாக்காளர்களைச் சந்தித்த போது…

தென் அமெரிக்க நாடுகள், தென் ஆபிரிக்காவிலிருந்து பயணிகள் இலங்கை வரத் தடை

தென் அமெரிக்க நாடுகள் மற்றும் தென்ஆபிரிக்காவுக்கு கடந்த 14 நாட்களுக்குள் சென்றிருந்த எந்தவொரு விமானப் பயணிக்கும் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப் படமாட்டாது என்று சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. உடனடியாக குறித்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய…

பயணத் தடை நீடிக்குமா, இல்லையா என்பதை 14ஆம் திகதிக்கு முன் அறிவிப்போம்: இராணுவத் தளபதி

விசேட வைத்திய நிபுணர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே நாட்டை முடக்கி வைத்துள்ளோம். மக்களின் உயிர்களே எமக்கு மிகவும் முக்கியம். எனவே, இந்த முடக்கம் தளருமா? நீடிக்குமா? என்பது தொடர்பில் எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன் அறிவிப்போம்” என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு…

இலங்கைக்கு 65,000 ஸ்புட்னிக் தடுப்பூசிகள் கிடைக்கும் : இராஜாங்க அமைச்சர் ஜயசுமண

கொரோனா வைரஸுக்கு எதிராக ரஷ்யாவினால் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் கொவிட் தடுப்பூசிகள் மேலும் 65,000 அடுத்த வாரம் இலங்கைக்குக் கிடைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.இவ்வாறு கிடைக்க உள்ள தடுப்பூசிகள் முதல் டோஸ் செலுத்துகைக்காக 50,000 தடுப்பூசிகளும் இரண்டாம் செலுத்துகைக்காக 15,000…

சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம்

இலங்கையில் அரச வைத்தியசாலைகளில் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத்  தீர்வு காணுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் சுகாதார ஊழியர்கள் நேற்று அரைநாள் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 7 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை…

வடக்கு மாகாணத்தில் நேற்று 130 பேருக்கு தொற்று உறுதி

யாழ்ப்பாணத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனாத் தொற்றுத் தொடர்பிலான பரிசோதனைகளில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 130 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடம், யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் எழுமாறறான பரிசோதனைகளிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட…

யாழ். மாவட்டத்தில் நேற்று மாலை வரை 49,280 பேருக்கு தடுப்பூசி: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

யாழ். மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை வரை 49 ஆயிரத்து 280 கோவிட்-19 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கொவிட்- 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின்…

இழப்பீட்டை செலுத்த கப்பல் உரிமையாளர் இணக்கம்

தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள இழப்பை கணக்கிட்டு செலுத்த குறித்த கப்பலின் உரிமை நிறுவனம் இணங்கியுள்ளதாக வணிகக் கப்பல் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் செனவிரத்ன தெரிவித்தார். கப்பல் விபத்து தொடர்பிலும் மற்றும் எதிர்வரும் நடவடிக்கைகள்…

சர்வமதத் தலைவர்களுக்கு உலருணவு நிவாரணம்

சர்வமதத் தலைவர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று(03) அலரி மாளிகையில் வைத்து உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்ட போது…————————– Reported by : Sisil.L

கர்ப்பிணித் தாய்மாருக்கு தடுப்பூசி வழங்க அனுமதி

கர்ப்பிணித் தாய்மாருக்கு எதிர்காலத்தில் தடுப்பூசி வழங்கல் பணி ஆரம்பிக்கப்படும் என குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் மருத்துவர் சித்ரமாலி டி சில்வா கூறினார்.  சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதைத் தெரிவித்தார். இது தொடர்பான சுற்றறிக்கைகள்…