ஜூன் 14 பயணத்தடையை நீக்க வேண்டாம்: பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம்

நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில்  ஜூன் 14ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பயணத்தடையை நீக்குவது சாத்தியமில்லை என பொதுச்  சுகாதார  பரிசோதகர்  சஙகத்தின்  தலைவர் உபுல் ரோஹண தெரிவத்தார்.பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும் பலர் வழக்கம் போலவே நடந்துகொள்வதாகவும்…

யாழ்.மாவட்டத்தில் மேலும் 92 பேருக்கு கொரோனா

யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 92 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவற்றின் அடிப்படையில் யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 71 பேர், அளவெட்டி பிரதேச…

யாழில் மேலும் இருவர் கொவிட் தொற்றால் மரணம்

யாழ்ப்பாணத்தில் கொவிட் -19 தொற்றால் இரண்டு நாட்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்று யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த சனிக்கிழமை கொக்குவிலைச் சேர்ந்த 85 வயதுடைய ஒருவர் கொவிட்-19 சிகிச்சை…

அமெரிக்க உதவிப்பொருட்கள் இலங்கையை வந்தடைந்தன

கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ள இலங்கைக்கு அமெரிக்க அரசால் வழங்கப்பட்ட அவசர உதவிப்பொருட்கள் நேற்று நாட்டை வந்தடைந்துள்ளன. கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ள தென்கிழக்காசிய நாடுகளுக்கு அமெரிக்க அரசு, தமது சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனம் ஊடாக விமானங்களில் உதவிகளை அனுப்புவதாக சில தினங்களுக்கு முன்னர்…

சீரற்ற காலநிலையால் 10 பேர் பலி ; 2இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள நாளாந்த நிலைவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நுவரெலியா, இரத்தினபுரி உட்பட 8 மாவட்டங்களில் 54,126 குடும்பங்களைச் சேர்ந்த 219,027 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15,499 பேர்…

மாவனெல்லையில் மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

கேகாலை மாவட்டம், மாவனெல்லை, தெவனகலப் பகுதியில் மண்சரிவில் சிக்கி காணாமல் போயிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரினதும் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. இப்பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் வீட்டுக்குள் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும்…

மக்கள் வீடுகளில் இருந்தால் மட்டுமே ஜூன் 14இல் நாட்டைத் திறக்கலாம் : பொலிஸ் பேச்சாளர்

நாட்டில் அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை எதிர்வரும் 14 ஆம் திகதி நீக்குவதா, இல்லையா என்பது மக்களின் கைகளில்தான் உள்ளது.இவ்வாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்சந்திப்பிலேயே அவர்…

வடக்கில் மேலும் 132 பேருக்கு கொவிட் தொற்று

யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடம், யாழ்.போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் தொற்றாளர்கள் 132 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று முன் தினம் இரவு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 03 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. யாழ்.பல்கலைக்கழகத்தின்…

யாழில் 39 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி

யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த சிறார்கள் பத்துப் பேர் உட்பட 39 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.யாழ்.பல்கலைக்கழகத்தின் கொரோனா ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்டபி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 பேர்…

சீரற்ற காலநிலையால் 170,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் : நால்வர் பலி ; 7 பேரைக் காணவில்லை

நாட்டில் நிலவும் மோசமான சீரற்ற காலநிலையால் இதுவரை 170,022 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொழும்பு,கம்பஹா, இரத்தினபுரி,  புத்தளம், களுத்துறை, நுவரெலியா மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 41,717 குடும்பங்கள் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.  இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன்…