மறவன்புலவு மக்களுக்கு நிவாரணப் பொதிகள் விநியோகம்

கொரோனா தொற்று தாக்கத்தால் பாதிக்கப்பட்ட தென்மராட்சி – மறவன்புலவு கிழக்கு கிராம மக்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டன. அமரர் நமசிவாயம் வல்லிபுரநாதனின் ஓராண்டு நினைவாக அவரின் குடும்பத்தவர்கள் இந்த உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர். அரிசி, மா, சீனி, பருப்பு, தேயிலை,…

யாழில் 24 பேர் உட்பட வடக்கில் 27 பேருக்கு தொற்று

யாழ்ப்பாணத்தில் 24 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 27 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆய்வுகூடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளிலேயே இவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று 731…

கொவிட் தடுப்பூசியைப் பெற்ற 22 பேருக்கு மீண்டும் அறிகுறி

கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட பின்னரும், நோய் அறிகுறிகள் காட்டிய 22 பேர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அனுராதபுரம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, தற்போது காணப்படும் எந்தவொரு…

யாழில் 86 பேர் உட்பட வடக்கில் 99 பேருக்கு நேற்று கொரோனா தொற்று

யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 86 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 99 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று 544 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில்,சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி…

எரிபொருள் விலை உயர்வை உடன் இரத்து செய்யுமாறு ஜே.வி.பி. கோரிக்கை

எரிபொருள் விலை அதிகரிப்பை அரசு உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.தொற்று நோய் மற்றும் ஜீவனோபாய இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எரிபொருள் விலை அதிகரிப்பு மேலும் சுமையாக அமைந்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள்…

கொரோனாவால் மேலும் 62 பேர் பலி; 18 பேர் வீடுகளில் மரணம்

கொரோனா வைரஸ் காரணமாக மேலும் 62 பேர் உயிரிழந்துள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளதுடன் 18 பேர் தங்கள் வீடுகளில் உயிரிழந்துள்ளனர் என  அறிவித்துள்ளது. மே 31ஆம் திகதிக்கும் ஜூன் 8ஆம் திகதிக்கும் இடையில் 55பேர்  உயிரிழந்துள்ளனர் எனவும் உயிரிழந்தவர்களில்…

பயணக் கட்டுப்பாடுகளை நீக்க சாதகமான நிலைமை இல்லை : பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம்

பயணக்கட்டுப்பாடுகளை நீக்க நாட்டின் நிலைமை சாதகமாக இல்லை என பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.எனவே 14ஆம் திகதி பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவது சாத்தியமில்லை என அதன் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்து பயணக் கட்டுப்பாடுகளை இன்னும் இரண்டு…

நாட்டில் பொருளாதார மையங்கள் இன்றும் நாளையும் திறப்பு

சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி மொத்த வியாபாரத்துக்காக பொருளாதார மையங்கள் இன்றும் நாளையும் திறந்திருக்கும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. திறந்திருக்கும் பொருளாதார மையங்கள் வருமாறு: தம்புள்ளை, நுவரெலியா, நாரஹேன்பிட்டி, இரத்மலானை, பிலியந்தலை, வெலிசறை, வெயாங்கொட, தம்புத்தேகம, மீகொட, கெப்பட்டிப்பொல, நாவலப்பிட்டி. மொத்த…

பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பகுதியில் விரைவாக மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்க பிரதமர் ஆலோசனை

விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதுள்ள பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பகுதியில் முறையான ஆய்வின் பின்னர் விரைவாக மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேற்று (11)…

யாழ். நாவற்குழி புதிய குடியிருப்பு பகுதியில் சமூகச் சீர்கேடுகள், குடும்ப வன்முறைகள் அதிகரிப்பு

நாவற்குழி புதிய குடியிருப்புப் பகுதியில் போதைப்பொருள் பாவனை, சமூக சீர்கேட்டு நடவடிக்கைகள் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் நிலையில் இரண்டு தந்தையர்கள் தங்கள் பிள்ளைகளை மிக மோசமாக தாக்கி சித்திரவதை செய்த சம்பவங்கள் கடந்த இரண்டு நாட்களுக்குள் நிகழ்ந்துள்ளமை தொடர்பில்…