ஊரடங்கு உத்தரவை விதிக்குமாறு அரசுக்கு விஷேட மருத்துவர்கள் சங்கம் கடும் எச்சரிக்கை

நாட்டில் வேகமாகப் பரவி வரும் கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ‘தாமதமின்றி’கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு விஷேட மருத்துவர்களின் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. நாட்டிலுள்ள அனைத்து சுகாதாரத் துறைகளும் ஏற்கனவே அதிகபட்ச திறனை எட்டியுள்ளதாக அச்சங்கம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. “பயணக் கட்டுப்பாடுகள்…

எரிவாயு கடைகளுக்கு முன் நீண்ட வரிசையில் மக்கள்

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாட்டின் சில நகரங்களில் நேற்று மக்கள் நீண்ட வரிசையில் காணப்பட்டனர். லாஃப் எரிவாயு விநியோகம் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டதால் லிட்ரோ எரிவாயுவைப் பெறவே மக்கள் காத்திருந்தனர்.  மாத்தறை, களுத்துறை, ஹொரணை ஆகிய பகுதிகளில் எரிவாயுவை நிரப்புவதற்காக மக்கள்…

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் இன்று முதல் கடுமையாக அமுல் – இராணுவத் தளபதி

இன்று முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு கடுமையாக அமுல்படுத்தப்படும் என இரா ணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேலும் அத்தியாவசிய மற்றும் சுகாதாரப் பணியாளர்களைத் தவிர வேறு எவரும் எந்த மாகாணத்தையும் கடக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்  என்றும் அவர்…

கொவிட் தடுப்பூசியின் 2ஆவது டோஸ் அதிகளவானோர் நேற்று பெற்றதாகப் பதிவு

கொவிட்-19 தடுப்பூசிகளின் 2ஆவது டோஸ் 311,102 பேருக்கு நேற்று(09) வழங்கப்பட்டது. இதுவரை ஒரு நாளில் வழங்கப்பட்ட 2ஆவது டோஸின் அதிக எண்ணிக்கை இதுவென  இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார். மொத்தமாக நேற்று 490,805 டோஸ் கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.  …

யாழில் 110 பேர் உட்பட வடக்கில் 164 தொற்றாளர் நேற்று அடையாளம்

யாழ். மாவட்டத்தில் 110 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 164 பேர் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டனர்.யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை,யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வு கூடங்களின் பரிசோதனை அறிக்கையிலேயே இந்த விடயம் வெளிவந்தது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் ஆய்வுகூடத்தில் 359 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு…

யாழில் நேற்று ஆசிரியர்கள் வாகனப் பேரணி போராட்டம்

சம்பள முரண்பாட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தியும், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு கோரியும் ஆசிரியர்களால் யாழ்ப்பாணத்தில் நேற்று வாகனப் பேரணிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.யாழ். முற்றவெளியில் இருந்து ஆரம்பித்து, யாழ். நகர வீதி வழியாக மாவட்ட செயலகம் வரையில்…

யாழில் 24 மணி நேரத்தில் கொரோனாவால் ஐவர் பலி

யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு வரையான 24 மணிநேரத்தில் மேலும் 5 பேர் கொவிட் – 19 நோயினால் உயிரிழந்தனர் என்று யாழ்.போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த 65 வயதுடைய ஆண்…

நிலைமையைப் பொறுத்து எந்நேரமும் நாடு முடங்கலாம் : சுகாதார அமைச்சு

நாட்டை முடக்கத் தீர்மானிக்கப்படவில்லை என்றாலும் நிலைமைகளைப் பொறுத்து  ஒரு சில மணித்தியாலங்களில் தீர்மானங்கள் மாறலாம் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாடு முடக்கப்பட வேண்டும் என்ற…

தடுப்பூசி ஏற்றிய அட்டை வைத்திருப்பது கட்டாயம்

கொவிட் தடுப்பூசி ஏற்றியதை உறுதிப்படுத்தும் அட்டையை வைத்திருப்பதை கட்டாயமாக்குவது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுப் போக்குவரத்துகளைப் பயன்படுத்தும் போதும் மற்றும் அரச, தனியார் நிறுவனங்களுக்குள் செல்லும் போதும் குறித்த நபர் தடுப்பூசியைப் போட்டுள்ளாரா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில் அந்த…

பிரேத அறைகளில் இடப்பற்றாக்குறையால் வைத்தியசாலைகளில் குவியும் சடலங்கள்

நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையில் பிரதான வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில் சடலங்கள் குவிந்து வருவதால் இடப்பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறிப்பாக களுத்துறை, பாணந்துறை மற்றும் ராகம வைத்திசாலைகளில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள்…