யாழ்.,கிளிநொச்சி மாவட்டங்களில் நீர்வழங்கல்திட்டங்கள்; பிரதமர் ஆரம்பித்து வைப்பார்

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி (பளை) பகுதிகளில் மூன்று இலட்சம் மக்களுக்கு (60,000 குடும்பங்களுக்கு) சுத்தமான குடிதண்ணீரை பெற்றுக் கொடுக்கும் இரண்டு பாரிய நீர் வழங்கல் திட்டங்கள் தொடக்கி வைக்கப்பட உள்ளன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  தலைமையில், ஒக்ரோபர் மாதம் 6ஆம் திகதி,…

யாழில் மயங்கி வீழ்ந்துஇறந்தவருக்குகொரோனா

யாழில் ஜெபம் செய்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து மரணமான குடும்பப் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வடமராட்சி – அல்வாய் வடமேற்கு, நாச்சிமார் கோயிலடியைச் சேர்ந்த செபபாக்கியம் கிறேஸ் மணி (வயது- 51) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.உயிரிழந்த பெண் கோவளம்…

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு நாட்டில் அமைதியின்மையை உருவாக்கும் – முஜிபுர் ரஹ்மான் எம்.பி.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்களின் எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.விலைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலான அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களால் மக்கள் மீது சுமை சுமத்தப்பட்டுள்ளது என அவர்…

இலங்கையில்மேலும் 71 கொவிட் மரணங்கள் பதிவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 71 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து…

திலீபனுக்கான நினைவேந்தல் நேற்று யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் அனுஷ்டிப்பு

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டு உயிர்நீத்த தியாக தீபம் திலீபனுக்கான நினைவேந்தல் நேற்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அனுஷ்டிக்கப்பட்டது. பிரத்தியேகமான இடமொன்றில் தியாகதீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலிக்கப்பட்டது. 1987 செப்டெம்பர்…

ஈழத்தின் பிரபல பாடகர் வர்ண ராமேஸ்வரன் கனடாவில் காலமானார்

ஈழத்தின் பிரபல பாடகர் வர்ண ராமேஸ்வரன் கொரோனா தொற்று காரணமாக நேற்று கனடாவின் ரொறன்ரோவில் காலமானார்.யாழ்ப்பாணம் அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட வர்ண ராமேஸ்வரன் அளவெட்டி சீனன் கோட்டை ஞானோதய வித்தியாசாலை, தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியில் கல்வி பயின்றார். கர்நாடக சங்கீதத்தை முறைப்படி கற்ற…

கொரோனா  தொற்றால் மேலும் 79 பேர் பேர் பலி

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 79 பேர் உயிரிழந்துள்ளனர்.  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து…

கட்டுப்பாடுகளுடன்   எதிர்வரும்  01ஆம்  திகதி  நாடு  மீண்டும்  திறக்கப்படும்  –  சுகாதார  அமைச்சர்

கட்டுப்பாடுகளுடன் எதிர்வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி நாட்டை மீண்டும் திறக்க அதிகாரிகள் நம்புவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இது தொடர்பான இறுதித் தீர்மானம் செப்டெம்பர் 30 ஆம் திகதி எட்டப்படும் என அவர் தெரிவித்தார். தற்போதைய நிலைமையை…

மன்னாரில் பொதுமக்கள் மீது கடற்படையினர் தாக்குதல்

மன்னார் பிரதேச செயலகத்துக்குட்பட்ட  வங்காலைப்பாடு என்னும் கிராமத்தில் இருந்து கடற்றொழிலுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு சென்று வந்த கிராமத்தவர் ஒருவரை நள்ளிரவு வேளையில் மதுபோதையில் இருந்த கடற்படையினர் வழிமறித்து எவ்விதக் காரணமும் இல்லாமல் வெறித்தனமாகத் தாக்கியுள்ளனர்.   அதை நேரில் பார்த்த…

நவம்பர்ஆம் வாரத்தில் நாடுவழமைக்கு திரும்பி விடும் – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன

தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முழு வீச்சில் இடம்பெறுவதால் நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் நாடு வழமைக்குத் திரும்பி விடும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.நாட்டில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் மிகச்சிறப்பாக…