இலங்கையில் காய்கறிகளின் விலைகள் அதிகரிப்பு

கொழும்பு ஐந்துலாம்புச் சந்திக்கு அருகிலுள்ள சில்லறை விற்பனை காய்கறிச் சந்தையில் நேற்று விற்கப்பட்ட காய்கறிகளின் 250 கிராம் விலைகளை இங்கு காணலாம்.  எனினும் சில காய்கறிகளின் விலைகள் சற்றுக் குறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இரசாயன உரங்களை அரசாங்கம் தடை செய்தமை, நாட்டின் பல…

வாழைச்சேனை, ஓட்டமாவடி வெள்ளக்கொடி பறக்க விட்டு துக்கம் அனுஷ்டிப்பு!

வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதான வீதிகளில் வர்த்தக சங்கங்களின் ஏற்பாட்டில் நேற்று (திங்கட்கிழமை) கிண்ணியா-குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற சம்பவத்திற்கு துக்க தினம் அனுஷ்டிக்கும் வகையில் பிரதான வீதியில் வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் நேற்று (23.11.2021) படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான…

குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற படகு விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.முப்பது வயது தாய், ஆறு வயது மகன், மூன்றரை வயது மகள் ஆகியோர் படகு விபத்தில் உயிரிழந்துள்ளமை உறுதியாகியுள்ளது. இன்னொரு குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண் பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்…

கோப்பாய் துயிலும் இல்லத்தின் முன் குழப்பம்!

யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக துப்புரவுப் பணியில் ஈடுபடுகிறவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இராணுவத்தினரும், பொலிஸாரும் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கோப்பாய் துயிலும் இல்லத்தை இராணுவத்தினர் இடித்தழித்து, பாரிய இராணுவ முகாமை அமைத்து, நிலைகொண்டுள்ளனர். அதனால் துயிலும்…

படகு விபத்தால் பலர் உயிரிழப்பு; சீற்றமடைந்த பொதுமக்கள் தௌபீக் எம்.பி. வீட்டின் மீது தாக்குதல்

குறிஞ்சாக்கேணி படகு விபத்தால் பலர் உயிரிழந்த செய்தியறிந்த மக்கள்  கிண்ணியா படகு விபத்து – பால விவகாரத்தில் தீர்வில்லை எனக்கூறி பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக்கின் வீட்டை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.   இதனால் வீட்டின் ஒரு பகுதி பலத்த சேதமடைந்துள்ளது. ——————-Reported by…

குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்தில் 10 பேர் பலி; மீட்பு பணிகள் முன்னெடுப்பு

திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாங்கேனி பிரதேசத்தில் மோட்டார் இழுவைப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது.குறித்த பகுதியில் பால நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருவதால் அவ்விடத்தில் சேவையில் ஈடுபட்டிருந்த மோட்டார் இழுவைப் படகு ஒன்றே இவ்வாறு கவிழ்ந்துள்ளது. அத்துடன் மேலும்…

பொதுஇடங்களுக்குச் செல்லும் போது தடுப்பூசி அட்டை கட்டாயம் : சுகாதார அமைச்சு

பொது இடங்களுக்குச் செல்லும் போது தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்குவதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இது தொடர்பான சட்ட ஆவணங்கள் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பொது…

யாழில் பிரபல வர்த்தகர் கொரோனாவால் மரணம்

யாழ்ப்பாணம் மானிப்பாயின் பிரபல வர்த்தக நிலையம் சுந்தர்சன் இலத்திரனியல் நிறுவனத்தின் ஸ்தாபகர் சிவகுமார் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகிறது.———Reported by : Sisil.L

சீன உரக் கப்பலுக்கு 6.7 மில்லியன் டொலர் வழங்க அரசாங்கம் தீர்மானம்

சீனாவிலிருந்து இலங்கைக்கு உரம் ஏற்றுமதி செய்ததற்காக 6.7 மில்லியன் அமெரிக்க டொலரைச் செலுத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.உரக் கையிருப்பின் பெறுமதியில் 75 வீதத்தைச் செலுத்தி பிரச்சினையைத் தீர்க்க தயாராக இருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.…

இலங்கையில் மேலும் 19 பேர் கொரோனாவால் பலி

இலங்கையில் மேலும் 19 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு மரணமடைந்த 19 பேரில் 12…