உலகின் மிகப்பெரி நீல மாணிக்கம்இலங்கையில் கண்டுபிடிப்பு

உலகின் மிகப்பெரிய ஒற்றை  கல்லாக உள்ள நீல மாணிக்கம் (Blue sapphire) இலங்கையின் இரத்தினபுரியில் நேற்று(12) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘ஆசியாவின் ராணி’ என்று பெயரிடப்பட்டஇந்த நீல மாணிக்கக் கல்லின் எடை சுமார் 310 கிலோ  என மதிப்பிடப்பட்டுள்ளது. தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண…

செட்டிகுளத்தில் பயிர்ச்செய்கை காணிகளை அபகரித்த வனவளத் திணைக்களத்தினர்

வவுனியா செட்டிகுளத்தில் தமிழ் மக்கள் பல ஆண்டுகளாக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வந்த காணிகளுக்குள் நேற்று உள்நுழைந்த வனவளத் திணைக்களத்தினா் எல்லைக்கற்களை நட்டு அவற்றைக் கையகப்படுத்தி உள்ளனர்.100 ஏக்கருக்கும் அதிகமான இடத்தில் உழுந்து பயிர்ச்செய்கை செய்யப்பட்டு ஒன்றரை மாதங்கள் கடந்த நிலையில் அங்கு…

மூதூரில் வெடிபொருள் வெடித்து சிறுவன் உயிரிழப்பு

திருகோணமலை – மூதூர் – இக்பால் நகரப் பகுதியில்  வெடிபொருள் ஒன்று வெடித்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்தான் என்று பொலிஸார் தெரிவித்தனர். நேற்று பிற்பகல் 3.50 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இக்பால் நகரைச் சேர்ந்த ஹாபீஸ் நளீப் என்ற 15…

கிளிநொச்சியில் கொரோனாவால் முதியவர் பலி

கிளிநொச்சியில் உயிரிழந்த முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை நடத்தப்பட்ட பி. சி. ஆர். சோதனையிலேயே இந்த விடயம் வெளியானது. உயிரிழந்தவர் வீரபத்திரர் பரமேஸ்வரன் (வயது 75) என்று மருத்துவ அறிக்கையில்…

டொலர் இல்லை:அத்தியாவசிய உணவுப்பொருள் கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளன

சுமார் 1500 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க முடியாமல் கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். டொலர் தட்டுப்பாடு காரணமாக பணம் செலுத்தி அவற்றை விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன்காரணமாக எதிர்வரும்…

சனத்தொகை கணக்கெடுப்பு அடுத்தாண்டு முன்னெடுக்கப்படும் : பிரதமர்

2021 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவிருந்த சனத்தொகை மற்றும் குடும்பக் கணக்கெடுப்பு 2022/2023 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “நிலையான வளர்ச்சித் திட்டங்களைத் தயாரிப்பதற்கு துல்லியமான தரவுகள் தேவை. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்…

பண்டிகைக் காலங்களில்சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றவும் சுகாதாரஅமைச்சர்

நாட்டின் தடுப்பூசி விகிதங்கள் திருப்திகரமான மட்டத்தில் இருப்பதால், நாடு இதுவரை அடைந்துள்ள முன்னேற்றத்தை மக்கள் பாதுகாக்க வேண்டும் என்றும், பண்டிகைக் காலங்களில் சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறும் சுகாதார அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல்ல பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார் சுகாதார வழிகாட்டல்களைப்…

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் யாழில் போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளை வேண்டி யாழ்ப்பாணம் நாவலர் வீதியிலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் நேற்று(10) காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. வலிந்து காணாமல்போனோருக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம்,…

ஐ.நா.உதவிச் செயலாளர் நாயகம் டிசம்பர் 13இல் இலங்கை விஜயம்

ஐக்கிய நாடுகள் சபைக்கான உதவி செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை (13) இலங்கை வரவுள்ளார். அவர் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் உதவி நிர்வாகி மற்றும் அதன் ஆசிய – பசிபிக்…

இன்று முதல் கொழும்பில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ்!

கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸானது இன்று முதல் வழங்கப்படவுள்ளது. தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளத் தகுதியான அனைவருக்கும் குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்படும் என கொழும்பு மாநகர சபையின் பிராந்திய தொற்றுநோய் நிபுணர் மருத்துவர் தினுக குருகே தெரிவித்தார்.…