முல்லைத்தீவில் உயிரிழந்த நிலையில் 9 டொல்பின்கள் மீட்பு

முல்லைத்தீவு அளம்பில் கடற்கரையில் இன்று(10) காலை ஒன்பது டொல்பின்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.டொல்பின்கள் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. மேலதிக பரிசோதனைகளுக்காக இறந்த டொல்பின் களின் உடல் பாகங்களை அரச பகுப்பாய்வாளரிடம் அனுப்பி வைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாணத்துக்குப் பொறுப்பான…

கொழும்பிலிருந்து யாழ்.சென்ற பஸ் விபத்து: ஒருவர் பலி; 08 பேர் காயம்

மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் பயணித்துக் கொண்டிருந்த தனியார் சொகுசு பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பஸ்ஸே இன்று அதிகாலை 2.00 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இக்கிரிகொல்லாவ…

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இந்தியா விஜயம்

இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா  இன்று(10) அதிகாலை இந்தியத் தலைநகர் புதுடில்லிக்குப்  பயணமானார்.இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தின்  இறுதிக் கிரியைகளில் பங்குபற்றும் நோக்கில் இராணுவத்தளபதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.————— Reported by : Sisil.L

மசகு எண்ணெய் இறக்குமதி செய்ய டொலர் இல்லை – கம்மன்பில

மசகு எண்ணெயை இறக்குமதி செய்ய அரசாங்கத்துக்குத் தேவையான டொலர் கையிருப்பு இல்லாதது பாரிய பிரச்சினையாக இருப்பதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இதற்கான தீர்வாக ரூபாவில் பணம் செலுத்தி மசகு எண்ணெய் இறக்குமதி முறையை நோக்கிச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு…

வடமேல் மாகாண புதிய ஆளுநராக கரன்னாகொட பதவிப்பிரமாணம்

வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக பிளீட் ஒப் த அட்மிரல் வசந்த கரன்னாகொட பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.நான்காம் கட்ட ஈழப் போரின் போது இலங்கை கடற்படைக்குத் தலைமை தாங்கிய கடற்படையின் அட்மிரல் வசந்த கரன்னாகொட கடந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் போது…

இலங்கையின் 510 கிலோ நீலக்கல் இரத்தினத்துக்கு ஏலச்சந்தையில் 250 மில்லியன் டொலர் கோரப்பட்டது

இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட 510 கிலோ எடையுள்ள நீலமாணிக்க இரத்தினக் கல்லுக்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதி கோரப் பட்டுள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்ற பொது இரத்தினக்கற்கள் ஏலத்தில் இந்த ஏலம் பெறப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார்.எனினும், இரத்தினக்கல்லின் உரிமையாளர்கள்…

இலங்கையில் கொரோனாவால் மேலும் 28 பேர் பலி

கொரோனா தொற்றால் இலங்கையில் நேற்று முன்தினம் புதன்கிழமை 28 மரணங்கள் நிகழ்ந்தாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று அறிவித்தது.   60 வயதுக்கு மேற்பட்ட 21 பேரும், 16 – 59 வயது பிரிவைச் சேர்ந்த 7 பேருமாக 15 ஆண்களும்…

ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வந்த தென் னாபிரிக்காவின் அரசியல்வாதி மரணம்

ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வந்த தென் னாபிரிக்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் இப்ரா ஹிம் இஸ்மாயில் இப்ராஹிம் காலமானார்.இந்திய வம்சாவழியினரான இவர், நேற்று தனது 85ஆவது வயதில் காலமானார். சர்வதேச உறவுகளுக்கான பிரதி அமைச் சராக இருந்த இவர் சர்வதேச…

பிறப்புச் சான்றிதழில் மாற்றம்வருகிறது

பதிவாளர் நாயகம் திணைக்களம் அடையாள இலக்கத்துடன் பிறப்புச் சான்றிதழ்களை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.இதன்படி எதிர்காலத்தில் புதிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் போது அடையாள இலக்கம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள இலக்கம் தேசிய அடையாள அட்டையைச் செயலாக்கப் பயன்படுத்தப்படும். இது…

பண்டிகைக் காலத்தில் மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படவும்: உபுல் ரோஹண

மக்கள் சுகாதார ஆலோசனைகளுக்கு இணங்காத பட்சத்தில், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தொற்றாளர்களின் ஆபத்து அதிகரிக்கலாம் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.நாடு பேரழிவை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக…