24 மணித்தியாலங்களில் 803 சந்தேகநபர்கள் கைது

யுக்திய சுற்றிவளைப்பில் இன்று(28) அதிகாலை 12.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 803 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பில் 562 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்பிரிவில் பட்டியலிடப்பட்டிருந்த 241 சந்தேகநபர்களும் இந்த சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.…

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து 4,000 பேருக்கு அனுமதி

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க தமிழக பக்தர்கள் இன்று (25) முதல் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா அடுத்த  மாதம் 23, 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. கச்சத்தீவு புனித அந்தோனியார்…

இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி ராஜா நீண்ட காலமாக உடல்நலக்குறைவு காரணமாக இலங்கை மருத்துவமனையில் காலமானார்

இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி ராஜா நீண்ட காலமாக உடல்நலக்குறைவு காரணமாக இலங்கை மருத்துவமனையில் காலமானார். அவளுக்கு வயது 47.இளையராஜா குழுவினர் ஜனவரி 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் ஒரு இசை நிகழ்ச்சிக்காக இலங்கை வந்துள்ளனர். சிகிச்சைக்காக…

வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு

 கட்டுநாயக்க அதிவேக வீதியின் 11 ஆம் மைல்கல் பகுதிக்கருகில் இன்று(25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த வாகன சாரதி ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…

சர்வதேச நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் சிலருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடல்

அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக உகாண்டா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் பலரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கரை சந்தித்து கலந்துரையாடினார். இந்தியா – இலங்கை…

இந்த ஆண்டு 2% பொருளாதார வளர்ச்சியை இலங்கை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கையின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கான புதிய முதலீடுகள் தொடர்பில் நம்பிக்கை வைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் நேற்று(17) இடம்பெற்ற உலக பொருளாதார மன்ற பங்குதாரர்களின் கலந்துரையாடலின் ஒரு அங்கமான நிபுணர் கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை…

2 தொழிற்சங்கங்கள் இன்று(16) காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பு

72 தொழிற்சங்கங்கள் இன்று(16) காலை 06.30 முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளன.  இந்த பணிப்பகிஷ்கரிப்பு நாளை(17) காலை 08 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில்வல்லுநர்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரவீ குமுதேஷ் தெரிவித்தார். வைத்தியர்களுக்கான சேவைக்கால இடையூறு, வருகை மற்றும் போக்குவரத்து…

துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு சட்டபூர்வமானதல்ல – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு சட்டபூர்வமானதல்ல என உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர் குழாம் இன்று(17) ஏகமனதாக தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்பிற்கு எதிராக ஹிருணிகா பிரேமச்சந்திர, அவரது தாய் மற்றும்…

கந்தகாடு புனர்வாழ்வு நிலைய நிர்வாகத்தை மாற்றுவது குறித்து பரிசீலனை – நீதி அமைச்சர்

எதிர்காலத்தில் கந்தகாடு புனர்வாழ்வு நிலைய நிர்வாகத்தை மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படுவதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த…

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க நிச்சயம் போட்டியிடுவார்: ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிச்சயம் போட்டியிடுவார் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.  சுற்றுலாத்துறை அமைச்சில் இன்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.  அடுத்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவாரா, இல்லையா என்பது…