நட்பு நாடுகளின் உதவிகள் அவசரமாக தேவைப்படுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு 

தற்போதைய தேசிய நெருக்கடிக்கான தீர்வுகளை ஜனநாயக கட்டமைப்பிற்குள் அமுல்படுத்துவது மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற ஆசியாவின் எதிர்காலம் தொடர்பான 27ஆவது சர்வதேச மாநாட்டில் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை…

எரிவாயுக் கப்பல் எரிபொருள் இன்மையால் இந்தியா திரும்பியது

லிட்ரோ எரிவாயுவை சந்தைக்கு வெளியிட இன்னும் சில நாட்கள் தாமதமாகும் என லிட்ரோ தெரிவித்துள்ளது. 3500 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய  கப்பல் இலங்கைக்கு வந்தாலும், கப்பலுக்கு எரிபொருளை வழங்க முடியாமல் இந்தியாவுக்குச் சென்றுள்ளது. கப்பல் கொழும்பு துறைமுகத்துக்குத் திரும்புவதற்கும் எரிவாயுவை…

இராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகுகிறார் சவேந்திர சில்வா

ஜூன் 01 முதல் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதி பதவியில் இருந்து நீக்கி பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய இராணுவ தலைமை அதிகாரியான விக்கும லியனகே புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்படவுள்ளார். நாடு…

மட்டக்களப்பில் இன்று முதல் சைக்கிளில்  கடமையில் ஈடுபடும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்

எரிபொருள் விலையேற்றம் மற்றும் எரிபொருள் இன்மை போன்ற பிரச்சினைகளால் மக்களுக்கு அத்தியாவசிய சேவையாற்றும் மட்டக்களப்பு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று முதல் தமது கடமைகளை சைக்கிளில் சென்று ஆற்றி  வருகின்றனர்.    கடமை நேரத்துக்கு மேலதிக நேரம் பணி புரியும் இவர்களுக்கான…

மே 31 வரை மட்டுமே கட்டுநாயக்கவில் விமான எரிபொருள் உள்ளது – விமான நிலைய சிரேஷ்ட அதிகாரி

இம்மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்குக் காரணம் ஜெட் எரிபொருள் குறைவதாகும். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை மட்டுமே விமான எரிபொருள் இருப்பதாக…

140 லீற்றர் பெற்றோலுடன் ஹாலி-எலவில் ஒருவர் கைது

அனுமதிப்பத்திரம் இன்றி முச்சக்கர வண்டியில் 140 லீற்றர் பெற்றோலைக் கொண்டு சென்ற 41 வயதுடைய நபர் ஒருவர் ஹாலி-எல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். உடுவர பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வீதித்தடையில் வைத்து அவர் கைது செய்யப் பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இவர் ஹாலி-எல…

40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டன

பல்வேறு குழுக்களின் எதிர்ப்பு மற்றும் கட்டுக்கடங்காத நடத்தை காரணமாக இலங்கையில் மொத்தம் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் பெறுவதற்காக எரிபொருள் நிரப்பும் நிலைய ஊழியர்களை சிலர் மிரட்டியதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக சங்கத்தின் இணைச்…

பஸ் போக்குவரத்துக் கட்டணம் அதிகரிப்பு

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள் மற்றும் தனியார் பஸ்களின் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. போக்குவரத்து சபை பேருந்து மற்றும் தனியார் பேருந்துக் கட்டணம் 19.5% உயர்த்தப்பட்டுள்ளது.   எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து…

திரிபோஷா  உற்பத்தி  நிறுத்தம்:  ஊட்டச்சத்துக் குறைபாட்டால்  கர்ப்பிணித் தாய்-சேய் பாதிப்பு

தானிய தட்டுப்பாடு காரணமாக அரசுக்குச் சொந்தமான ‘திரிபோஷா’ தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது.திரிபோஷா என்பது இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் ஊட்டச்சத்து நிரப்பியாகும். சோளம் மற்றும் சோயா விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளதுடன், இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்துக்குள் சோளம் அறுவடை…

எரிபொருள் வழங்கலில் வரையறை இன்று முதல் அமுல்

வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம்  வரையறை செய்யப் பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று(24) முதல் அமுலாகும் வகையில் இத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.   இதற்கமைய, மோட்டார் சைக்கிள்களுக்கு 2,500 ரூபாவுக்கும், முச்சக்கர வண்டிகளுக்கு 3,000 ரூபாவுக்கும் ஏனைய…