வற் வரி காரணமாக பனிஸ் ஒன்றின் விலை 100 ரூபா வரை அதிகரிக்கும்

பேக்கரி உரிமையாளர்கள் 12 சதவீத வற் வரியைச் செலுத்த வேண்டியிருப்பதால் எதிர்காலத்தில் பனிஸ் மற்றும் ஏனைய பேக்கரி பண்டங்களின் விலைகள் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். உரிய வற் வரியை…

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தை நோக்கிப் படையெடுக்கும் இளையோர்

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியிலிருந்து  தம்மைப் பாதுகாக்கும் நோக்கில் வெளிநாடு செல்வதற்காக, வவுனியா புகையிரத நிலையம் அருகில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு பிராந்திய அலுவலகத்தின் முன்பாக, நள்ளிரவு 12 மணியிலிருந்து வரிசையில் இடம் பிடிப்பதற்காக இளைஞர்,யுவதிகள் காத்திருப்பதாகத் தெரிய வருகிறது. மட்டக்களப்பு,…

இலங்கைக்கு உருளைக்கிழங்கை வழங்கவுள்ள பங்களாதேஷ்

பாரிய மக்கள்தொகை கொண்ட நாடாக இருந்தாலும், இந்த நெருக்கடியின் போது இலங்கைக்கு உருளைக்கிழங்கை வழங்கலாம் என பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) செயலாளர் நாயகம் எசல ருவான் வீரகோன் மற்றும் பங்களாதேஷ் பிரதமர்…

மத்திய வங்கி ஆளுநர் நந்தலாலின் பதவிக்காலம் இம்மாதத்துடன் பூர்த்தியாகிறது

மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் பதவிக் காலம் இம்மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இதன் பின்னர் ஜனாதிபதி புதிய மத்திய வங்கி ஆளுநரை நியமிக்க வேண்டும் அல்லது தற்போதைய ஆளுநரின் பதவிக் காலத்தை நீடிக்க வேண்டும். மத்திய வங்கிக்கு…

பாணந்துறையில் காஸ் வரிசையில் நின்றவர் ஆற்றில் விழுந்து பலி

நேற்றிரவு முதல் பாணந்துறை எரிவாயு வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் இன்று(4) காலை பாணந்துறை ஆற்றில் முகம் கழுவச் சென்று ஆற்றில் விழுந்து காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாணந்துறை உயிர் காக்கும் படையினர் அவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார்…

ஒக்டோபர் முதல் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் -பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் எச்சரிக்கை

2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் 195,000 மெற்றிக் தொன் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என பேராதனை பல்கலைக்கழக விவசாய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே எச்சரித்துள்ளார். நாடும் மக்களும் 50% நெல் விளைச்சலையும் 65% முதல்…

திங்கள் முதல் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே  தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடும்

டீசல் தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சேவையில் ஈடுபடும் பஸ்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. திங்கட்கிழமை முதல் இரண்டு வார காலத்துக்கு மூன்றில் ஒரு பங்கு பஸ்கள் மாத்திரமே இயங்கும் என சங்கத்தின்…

பாடசாலைகள் திங்கட்கிழமை மீள ஆரம்பம்

2022 ஆம் ஆண்டு முதல் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.இதன்படி, முதலாம் தவணையின் இரண்டாம் கட்டத்துக்காக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் ஜூன் 06 திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும். அன்று அரசாங்கப் பாடசாலைகள்…

மண்ணெண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்னும் சில நாட்களில் மண்ணெண்ணெய் விநியோகம் செய்ய முடியும் என அந்நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார். தற்போது மண்ணெண்ணெய் இருப்பு்கள் இல்லாததால் நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில்…

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் புதிதாகப் பிறந்த  வங்காளப் புலிக்குட்டிகளை பார்வையிட வாய்ப்பு

மூன்று மாதங்களுக்கு முன்னர் பிறந்த மூன்று வங்காளப் புலிக்குட்டிகளை நேற்று (2) முதல் தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் பொதுமக்கள் பார்வையிடும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு சீன மிருகக்காட்சிசாலையில் இருந்து தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்குக் கொண்டுவரப்பட்ட ரொபின் என்ற வங்காளப் புலிக்கும்…