கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

வரலாற்று சிறப்பு மிக்க கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் கொடியேற்றத் திருவிழா இன்று(3) பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடைசூழ விமர்சையாக இடம்பெற்றது.    தொடர்ந்து தேவாலயத்தில் நவநாள் திருப்பலிகள் இடம்பெற்று எதிர்வரும் 12ஆம் திகதி வெஸ்பர் ஆராதனையும் 13ஆம் திகதி(திங்கள்)…

இன்று நள்ளிரவு முதல் தொலைத்தொடர்பு வரி அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைத்தொடர்பு வரி அதிகரிக்கப்படவுள்ளது. அதற்கமைய குறித்த வரியானது, 11.25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி தொலைபேசிக் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளன.—————– Reported by :Anthonippillai .R

சகல அரச அலுவலகங்களும் வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும்

தொழில் திணைக்களம் உட்பட அனைத்து அரச அலுவலகங்களும் திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே திறந்திருக்கும் என்றும் 03 ஜூன் 2022 முதல் வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மூடப்பட்டிருக்கும் என்றும் தொழில் ஆணையர் பிரபாத் சந்திரகீர்த்தி அறிவித்துள்ளார். தற்போதுள்ள வளப்பற்றாக்குறையில் அரச…

வரி அதிகரிப்பால் இறக்குமதி பழங்களின் விலைகள் உயர்ந்தன

பெறுமதிசேர் வரி அதிகரிப்பு மற்றும் புதிய வரி திருத்தங்கள் காரணமாக இறக்குமதி செய்யப்படும் பழங்களின் சில்லறை விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.அதன்படி, அப்பிள் ஒன்றின் விலை 200 ரூபாவாகவும், ஆரஞ்சு பழத்தின் விலை 120 ரூபாவாகவும்,…

வேகமாக பரவும் டெங்கு; நேற்று மட்டும் 313 பேர் பாதிப்பு

இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் 24,523 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார். குறித்த டெங்கு நோயாளர்களில் 6,483 பேர் மே மாதத்தில் அடையாளம் காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். நேற்று (01)…

மே 9 காலிமுகத் திடல் வன்முறைகள் தொடர்பில் மஹிந்த கஹந்தகம கைது

கடந்த மே 09ஆம் திகதி காலிமுகத் திடலில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான வழக்கில் சந்தேக நபராக குறிப்பிடப்பட்டிருந்த கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்…

இலங்கையில் மதுபானங்களின் விலையும் அதிகரிப்பு

பெறுமதி சேர் வரி அதிகரிப்பு காரணமாக மதுபானங்களின் விலையை இன்று முதல் அதிகரிக்க உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி, 750 மில்லி லீற்றர் மதுபானப் போத்தல் ஒன்றின் விலை 520 ரூபாவினாலும், பியர் போத்தல் ஒன்றின் விலை 30 ரூபாவினாலும் அதிகரிக்க…

உர இறக்குமதியிலிருந்து அரசு விலகி  தனியார் வர்த்தகர்களிடம் ஒப்படைக்கப்படும் – மஹிந்த அமரவீர

எதிர்வரும் மகா பருவம் தொடக்கம் உர இறக்குமதியில் இருந்து அரசாங்கம் விலகும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி நாட்டுக்குத் தேவையான அனைத்து உரங்களையும் தனியார் வர்த்தகர்கள் ஊடாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் அனைத்து…

சீரற்ற காலநிலை; நிவாரணப் பணியில் ஈடுபட்ட ஒருவர் பலி, 576 பேர் பாதிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணக் கடமைகளை நிறைவுசெய்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அதிகாரி ஒருவர், இரத்தினபுரி – குருவிட்ட பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்டு, உயிரிழந்தாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி – கிரியெல்ல பகுதியில் நிவாரணப் பணியில் ஈடுபட்ட…

இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்ட 369 பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி

இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்ட 369 பொருட்களை இறக்குமதி செய்ய இன்று முதல் அனுமதிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், அவற்றிற்கு விதிக்கப்பட்டுள்ள வரிகள் மற்றும் விதிமுறைகள் அமுலில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.மேலும் இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக…