எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பலின் கப்டன் உட்பட மூவருக்கு இலங்கையிலிருந்து வெளியேறத் தடை

எக்ஸ்பிரஸ் பேர்ள்’ கப்பலின் தலைமை மாலுமி இலங்கையிலிருந்து வெளியேறுவதைத் தடை செய்து, கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.கொழும்புத் துறைமுகத்துக்கு அருகே தீ விபத்துக்குள்ளான இந்தக் கப்பலின் பிரதான பொறியியலாளர் மற்றும் உதவிப் பொறியியலாளர் ஆகியோரும் இலங்கையை விட்டு வெளி
யேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.கப்பல் விபத்து தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் ஆஜரான அரச தலைமை வழக்கறிஞர் மாதவ தென்னக்கோன் முன்வைத்த வேண்டுகோளைப் பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதிவான் பிரியன்த லியனகே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.கப்பல் விபத்துக்குள்ளான சம்பவத்தின் சந்தேக நபர்களாக தலைமை மாலுமி, பிரதான பொறியியலாளர் மற்றும் உதவிப் பொறியியலாளர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.மேற்படி மூவரையும் எதிர்வரும் 7ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்து மாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு மற்றும் அரச ஆய்வாளர் திணைக்கள அதிகாரிகள் கப்பல் விபத்து நடந்த இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்ளவும் நீதிவான் அனுமதி வழங்கியுள்ளார்.      
——————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *