யாழ். மாவட்டத்தில் நேற்று ஒன்றரை வயதுப் பெண் குழந்தை, 18 சிறுவர்கள் உட்பட 100 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர் என்று அறிய வருகின்றது.யாழ்ப்பாணத்தின் ஆய்வுகூடங்களில் நேற்று இடம்பெற்ற பி.சி.ஆர். சோதனைகளிலேயே இந்த முடிவுகள் வெளியாகின என்று உரிய சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் ஊடாக தொற்றாளர்களுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.
நேற்றைய தினம் கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 39 பேரும் யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 21 பேரும் உடுவில் மருத்துவ அதிகாரி பிரிவில் 18 பேரும் சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 10 பேரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 5 பேரும் நல்லூர், சண்டிலிப்பாய் மருத்துவ அதிகாரி பிரிவுகளில் தலா ஒருவரும் என்று 100 பேர் நேற்று தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.இதுதவிர மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 4 பேர் அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் 3 பேர் சங்கானை வைத்தியசாலையில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டனர்.
இதேசமயம் கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒன்றரை வயது பெண் குழந்தை 7, 10, 11, 13, 14 வயதுடைய 5 சிறுமிகளும் 8, 9, 12, 14 வயதுடைய நான்கு சிறுவன்களுமாக 9 சிறுவர்கள் தொற்றுக்கு இலக்காகினர்.
இதேபோல யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 8,15 வயதுடைய இரு சிறுமிகளும் 5, 14 வயது சிறுவன்கள் இருவருமாக 4 சிறுவர் களும் உடுவில் மருத்துவ அதிகாரி பிரிவில் 10 வயது சிறுவன், 12 வயது சிறுமி என இருவரும் சாவகச்சேரி மருத்துவ அதிகாரி பிரிவில் 6, 9 வயதுடைய இரு சிறுவன்கள், 12 வயது சிறுமி ஒருவருமாக யாழ். மாவட்டத்தில் 18 சிறுவர்
களும் நேற்று தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.
———————–
Reported by : Sisil.L