பொகவந்தலாவயில் கடந்த 23ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை நேற்று கிடைக்கப்பெற்ற நிலையில் அதில் 45பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என பொகவந்தலாவ சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.
தொற்றாளர்கள் பொகவந்தலாவ, கர்கஸ்வோல் தோட்டம் , கம்பியன் தோட்டம், நோர்வூட் கொன்சி பிரதேசம், கொட்டியாகல தோட்டம் ஆகிய பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கூறினா்.
இதேவேளை பொகவந்தலாவ சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நேற்று 2 இறப்புகள் பதிவாகியுள்ளன.இதன்படி இப்பிரிவில் 12 கொரோனா மரணங்கள் இதுவரை பதிவான நிலையில் 504 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
——————
Reported by : Sisil.L