இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் கட்டுப்படுத்த குறைந்தபட்சம் இரண்டு வாரங்களாவது நாட்டை முழுமையாக முடக்க வேண்டும் என்று பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஓரளவு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்திய போதும் தற்போதைய நிலைமையைக் கட்டுப்படுத்த அது போதாது என்று பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண நேற்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.நாம் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதால் அனைவரும் சிந்தித்துச் செயற்படுவதுடன், நாட்டுக்கு ஏதாவது நல்லது
செய்யும் படியும் அவர் கேட்டுக்கொண்டார். குறைந்தது இரண்டு வாரங்களுக்குநாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட வேண்டும் எனவும்
அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
—————
Reported by : Sisil.L