இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பரவிவரும் கறுப்பு பூஞ்சை எனப்படும் கிருமித் தொற்றானது மிக வேகமாகப் பரவி வருகிறது.
இந்நிலையில், குறித்த கறுப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, குறித்த நபர் அம்பாறைப் பகுதியில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று அதிகாரி டொக்டர் பிரசாத் கொலம்பகே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இந்தக் கிருமி அதிகரிக்குமாக இருந்தால், நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மாத்திரமன்றி, மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.இந்த கிருமி, கொவிட் வைரஸ் தொற்றுடன் எவ்வாறு இணைந்தது என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் மிகவும் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் கூறுகின்றார்.
இந்த நோய் அம்பாறைப் பகுதிக்கு எவ்வாறு வந்தது என்பது தொடர்பில் பாரிய பிரச்சினை காணப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
——————-
Reported by : Sisil.L