வவுனியாவில் சிறைச்சாலைக் கைதிகள் 10 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர் களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்திய சாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் சில முடிவுகள் நேற்று மாலை வெளியாகின. அதில், வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் 10 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றாளர்களைக் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுடன் தொடர்புடையவர்களைத் தனிமைப் படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
—————————–
Reported by : Sisil.L