கொரோனா இரண்டாவது அலை இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் சமூக வலைத் தளத்தில் வெளியான வீடியோ ஒன்று காண்போரை அதிர்ச்சியடையச் செய்தது. பிபிஇ கிட் அணிந்த நான்கு பேர் ஒருவரை சாக்கில் தூக்கிக் கொண்டு பிக் அப் வாகனத்தில் ஏற்றிச் செல்லும் வீடியோ அது.
கேரள மாநிலத்தில் தான் அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. 54 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் கொரோனா மையத்தை தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கு மாறு கேட்டுள்ளனர்.
சரியான பதில் இல்லாததால் தன்னார்வலர்களின் உதவியுடன் பிக் அப் வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஆங்கில ஊடகங்களில் வெளியான செய்தியில், கேரள மாநிலம் கூரம்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் சபு.
இவரது மனைவி அனி சேவியர் மே 3ஆம் திகதி கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சபு மற்றும் அவரது குழந்தைகளிடம் மருத்துவர்கள் கொரோனா டெஸ்ட் எடுக்கவில்லை. அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
—————————
Reported by : Sisil.L