இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 921 ஆக அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்கள் தொடர்பில் ஒரே நாளில் நாட்டில் அறிவிக்கப்பட்ட அதிகபட்ச மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும்.
———————
Reported by : Sisil.L