கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள மாகாணங்களுக்கிடையேயான பயணத்தடைகளுக்கு ஏற்ப ஹோட்டல்களில் வேறு மாகாணத்தவரை தங்க அனுமதிக்க வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் கூறினார்.எனினும் ஒரே மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஹோட்டல்கள், விருந்தினர் விடுதிகளில் தங்குமிட வசதிகளை வழங்க முடியும் என அவர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸின் மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அனைத்து மாகாணங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் மாகாணங்களுக்கிடையேயான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
எல்லைகளில் பயணக்கட்டுப்பாடுகளைச் செயற்படுத்த பொலிஸ் அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
அத்தியாவசிய சேவைகள் என வகைப்படுத்தப்பட்ட நிறுவன ஊழியர்கள் தமது அலுவலக அடையாள அட்டைகள் அல்லது அலுவலக ஆவணங்களை மாகாணங்களைக் கடக்கும் சோதனைச்சாவடிகளில் அனுமதிப்பத்திரமாகப் பயன்படுத்தலாம் என அவர் மேலும் கூறினார்.
———————
Reported by : Sisil.L