யாழில் கொரோனாவால் வயோதிபர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றால் வயோதிபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா நோயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22ஆகஅதிகரித்துள்ளது.

வடமராட்சி, உடுப் பிட்டியைச் சேர்ந்த 88 வயதுடைய வயோதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த வயோதிபர் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார். எனினும், சிகிச்சை பலனளிக்காது நேற்று பிற்பகல் 3 மணிக்கு அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது உயிரிழப்புக்குக் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பும் காரணம் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தால் அறிக்கையிடப்பட்டுள்ளது.


வயோதிபரின் சடலம் யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் மயானத்தில் இன்று மின் தகனம் செய்யப்படவுள்ளது.  
——————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *