ஆப்கான் தலைநகர் காபுலில் பாடசாலையொன்றிற்கு வெளியே இடம்பெற்ற குண்டுவெடிப்பு காரணமாக 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் பாடசாலையிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த வேளை இந்தக் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.
கொல்லப்பட்டவர்களில் பலர் மாணவிகள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கார் குண்டுத் தாக்குதலே இடம்பெற்றது என ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ள அதேவேளை
மூன்று குண்டு வெடிப்புகள் இடம்பெற்றதாக சம்பவம் இடம்பெற்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
நான் புழுதி மற்றும் புகைமண்டலத்திற்கு நடுவில் பல உடல்களைப் பார்த்தேன் என ஒருவர் தெரிவித்துள்ளார்.
தாயொருவர் தனது பிள்ளைகளை பெயர் சொல்லி அழைத்து தேடுவதைப் பார்த்தேன். பின்னர் அவர் தனது மகளின் இரத்தம் தோய்ந்த பேர்ஸை கண்டார். அந்த இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார் என ஒருவர் தெரிவித்துள்ளார்.
——————-
Reported by : Sisil.L