சுகாதார விதிகளை மீறியோரை அதிரடியாகக் கைது செய்த யாழ்.பொலிஸார்

யாழ்ப்பாண நகரில் நேற்று விஷேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்த யாழ்ப்பாணப் பொலிஸார் முகக்கவசமின்றி நகரில் நடமாடியோர், வாகனங்களில் பயணித்தோர், கடைகளில் நின்றோர் என பலதரப்பட்ட இளைஞர்களைப் பிடித்து துக்கிச் சென்று பேருந்தில் ஏற்றிச்சென்றனர்.
நேற்று முன்தினம் யாழில் இடம்பெற்ற கொரோனா விழிப்புணர்வுச் செயற்பாட்டில் கலந்துகொண்ட யாழ்ப்பாண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றாதோருக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையிலேயே இன்று இத்திடீர் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *