கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிரபல நடிகர் பிக்ரம்ஜித் கன்வர்பால் உயிரிழந்துள்ளார்.
இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ‘அஞ்சான்’ படத்தில் நடித்துள்ளதுடன் இந்தியில் பல படங்களில் நடித்து மிகப் பிரபலமானவர்.
கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஏராளமான விளம்பரப் படங்களிலும் நடித்துள்ள இவருக்கு வயது 52. இவரின் இறப்புக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Reported by : Sisil.L