வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தருகின்றவர்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தை நீடிக்க யோசனைகள் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து வருவோர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அடையாளம் காண்பதற்கு இது உதவும் என பொதுச் சுகாதார அமைச்சின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எஸ்.எம். ஆனல்ட் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “வெளிநாட்டிலிருந்து வருகை தருகின்ற மக்களுக்கான தனிமைப்படுத்தல் காலம் எதிர்காலத்தில் அதிகரிக்கப்படும்.
நாங்கள் தற்போது அதற்கான வேலையே செய்கிறோம். தனிமைப்படுத்தல் காலத்தில் வெளிநாட்டிலிருந்து வருகை தரும் பாதிக்கப்பட்ட நபரை அடையாளம் காண தேவையான நேரத்தை இதனூடாகப் பெறுவதே நோக்கமாகும்.
இதேவேளை சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள கொவிட்-19 கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்றவில்லையெனின் பயணக் கட்டுப்பாடுகள் நாடளாவிய ரீதியில் விதிக்கப்பட வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்
Reported by : Sisil.L