நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை விஜயதாச ராஜபக்ஷ விமர்சித்தார் என்ற அடிப்படையிலேயே இந்த ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான விவகாரங்களைக் கையாள்வதற்கு பொதுஜன பெரமுனவுக்கு ஒரு முறையுள்ளது எனத் தெரிவித்துள்ள அமைச்சர் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த முறையைப் பின்பற்றுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
விஜயதாச ராஜபக்ஷவின் அரசியல் வரலாறும் நடத்தைகளும் மக்கள் நன்கு அறிந்த விடயம் என கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
Reported by : Sisil.L