யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் என வடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை நேற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 186 பேரின்மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.அதில்10 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
திருநெல்வேலிச் சந்தை வர்த்தகர்கள், பணியாளர்கள் மற்றும் அவர்களது உற
வினர்கள் என 8 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்
ளது. அவர்களிடம் நேற்று முன்னெடுக்கப்பட்ட இரண்டாவது பரிசோதனையி
லேயே தொற்றுள்ளமை அறியப்பட்டது.கிளிநொச்சி வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒரு
வருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்
Reported by : Sisil.L