புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 5,000 ரூபா வழங்க அரசாங்கம் தீர் மானித்துள்ளது என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காகப் புத்தாண்டை முன்னிட்டு 5,000 ரூபா நிவாரணக் கொடுப் பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனையின் படி குறித்த கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.புத்தாண்டுக்கு முன்னர் இந்த நிவாரணக் கொடுப்பனவை வழங்கு வதற்கான நடவடிக்கையைத் துரிதப்படுத்துமாறு சமுர்த்தி அதிகாரி களிடம் கோரியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
Reported by : Sisil.L