சிவஞானசோதி காலமானார்

மனித உரிமைகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளரும், பொதுச்

சேவை ஆணைக்குழுவின் உறுப்பினரும், புனர்வாழ்வு அமைச்சின் முன்னாள்

செலளாளருமான வேலாயுதன் சிவஞானசோதி நேற்றிரவு கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார். மரணமடையும் போது அவருக்கு வயது 61.

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்டவரான சிவஞானசோதி

சுகவீனமுற்ற நிலையில் நேற்றுக் காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் மருத்துவ சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்றிரவு 9.30மணியளவில் காலமானார்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் அவரது அமைச்சின்செயலாளராகவும் பணியாற்றி, வடக்குகிழக்கு புனரமைப்பு, இடம்பெயர்ந்த

மக்களின் மீள்குடியேற்றம் போன்ற நடவடிக்கைகளில் தீவிரமான அக்கறை

காட்டியிருந்தார். இறுதிக் கிரியைகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டது.

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *