மன்னாரில் கடலட்டை இனப்பெருக்க நிலையம் திறப்பு

கடற்றொழில், கைத்தொழிலை மேம்படுத்தும் வகையில் மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட கடலட்டை இனப்பெருக்க நிலையம் நேற்று

செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

தேசிய நீர் வாழ் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ஜயந்த விஜேரத்தினவின் அழைப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோர் இணைந்து கடலட்டை இனப்பெருக்க நிலையத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து கடலட்டை உற்பத்தியை நேரடியாக பார்வையிட்டதோடு உரிய தரப்பினருடன் கலந்துரையாடினர்.

இதன்போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.திலீபன், மன்னார்

மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மெல், மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் உட்பட திணைக்கள தலைவர்கள், அமைச்சின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *