வடமராட்சி கிழக்கு – மணற்காட்டில் தடை செய்யப்பட்டசுருக்கு வலை மீன்பிடியில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் தங்கி
யிருந்த வாடி இனம் தெரியாதவர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது.இந்தப் பகுதியில் சுருக்கு வலையைப் பயன்படுத்தி சட்டவிரோத தொழில் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகக்கூறப்படுகின்றது.
இந்நிலையில், இவ்வாறு சட்டவிரோத மீன் பிடியில்ஈடுபட்டவர்கள் குடத்ததனை மற்றும் பொற்பதி ஆகிய கடற்கரைகளில் இராணுவ முகாமை
அண்மித்து வாடிகளை அமைத்து தங்கியிருந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்
டனர்.இவ்வாறு மீன்பிடியில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்கள் சுருக்கு வலை பயன்படுத்துவதை தவிர்ப்பதற்கும் அங்கிருந்து வெளியேறவும் இருநாள்
அவகாசம் குடத்தனை, பொற்பதி மீனவர்களால் வழங்கப்பட்
டது. நேற்றுடன் அந்தக் கெடு முடிவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Reported by : Sisil.L