யாழ்ப்பாணக் குடாநாட்டில் நேற்று ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதனையடுத்து நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் திருநெல்வேலி சந்தை மற்றும் ஒரு கிராம சேவகர் பிரிவு என்பன முடக்கப்படவுள்ளன.
திருநெல்வேலி சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபடுவோரில் அதிகமானோருக்கு கொரோனாத் தொற்று தொடர்ந்தும் உறுதி செய்யப்படுவதனால் சந்தை வியாபாரிகள் அதிகம் வசிக்கும்
பால்பண்ணை பகுதி முழுமையாக முடக்கப்படுவதோடு ஜே/110 கிராம சேவகர் பிரிவின் கீழ் உள்ள ஒரு பகுதியை அண்டிய
வர்த்தகப் பிரதேசமும் கட்டுப்படுத்தப்படவுள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டோரில் ஒருவர் மாநகர சபை உறுப்பினர், இன்னொருவர் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் என்று தெரிவிக்கப்பட்டது.
இதேநேரம் யாழ் நகரப் பகுதியின் வர்த்தகப் பிரதேசத்தின் ஒரு பகுதி ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளதோடு தற்போது
கொரோனா எண்ணிக்கை அபாயகரமாக அதிகரிக்கும் நிலைமையில் தற்போது தடை செய்யும்
பகுதியும் அதிகரிக்கவிரு
கின்றது.
இதேநேரம் இன்றைய தினம் யாழ். நகரின் வர்த்தகர்கள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் மற்றும் திருநெல்வேலிப் பிரதேச வர்த்தகர்களிடம் பி.சி.ஆர். மாதிரிகள் பெறப்படவுள்ள நிலையில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை
மேலும் அதிகரிக்கலாம் என்றே அஞ்சப்படுகின்றது.
இவ்வாறு தொற்று எண்ணிக்கை அதிகரிக்கின்றபோதும் பாடசாலைகள்,தொழில் திணைக்களங்களை மூடவும்,
போக்குவரத்தை கட்டுப்படுத்தவும் அரசு தயக்கம் காட்டுவது அச்சத்தை ஏற்படுத்துவதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
Reported by : Sisil.L