பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்ட பதிவு:
கொரோனாவில் இருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதுடன், பரிசோதனை செய்து கொண்டேன்.லேசான அறிகுறி தென்பட்டதைத் தொடர்ந்து நடந்த பரிசோதனையில் கொரோனா இருபபது உறுதியானது. இருப்பினும் வீட்டில் இருந்த மற்றவர்களுக்கு தொற்று இல்லை.
வீட்டிலேயே என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மருத்துவர்களின் அறிவுரைப்படி தேவையான வழிமுறைகளை கடைப்பிடித்து வருகிறேன்.
Reported by : Sisil.L