மியான்மர் போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 320 ஆக உயர்வு

மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களைக் கைது செய்து சிறை வைத்தது.

இதனைத் தொடர்ந்து இராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு மாபெரும் போராட்டம் வெடித்தது.‌ நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கக் கோரியும், சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.  ‌இந்தப் போராட்டத்தை இராணுவம் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.

ஆனாலும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான போரட்டத்தை ஒடுக்க இராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 320 ஆக உயர்ந்துள்ளது.

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *